Search

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு : குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவிக்கிறதா? - ஆசிரியர் சொன்ன உண்மைக் கதை!

Saturday, 25 January 2020

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கான தேர்வு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் அரசு, தற்போது 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

10 வயது கொண்டிருக்கும் குழந்தைகள் இந்த பொதுத்தேர்வால் மனச்சோர்வடைந்து கல்வியின் மீதான ஆர்வத்தை துறக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என கல்வியாளர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் கட்டாயக்கல்விச் சட்டம் குலைக்கப்பட்டு மாணவர்கள் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.



இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள பள்ளி ஆசிரியையாக உள்ள மகாலக்ஷ்மி என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால் மாணவர்களின் கல்வி எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் (4ம் வகுப்பு), மகேஸ்வரி (8ம் வகுப்பு) குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ரஞ்சித் தனது பெயரைக் கூட எழுத மிகவும் சிரமப்படுவார் என்றும், மகேஸ்வரி சுமாராக படித்தாலும் படிப்பதற்காக முயற்சி செய்துகொண்டே இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார் மகாலக்ஷ்மி.



மகேஸ்வரிக்கு அவ்வப்போது ஆறுதலாகவும், அரவணைப்பாகவும் இருந்து பாடம் கற்பித்து வந்த மகாலக்‌ஷ்மிக்கு காலாண்டு விடுப்பு முடிந்து சிறிது நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அவ்விரு மாணவர்களின் பள்ளி இடைநிற்றல்.

ஏனெனில், காலாண்டுத் தேர்வு சமயத்தில்தான் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனை மனதில் வைத்துக்கொண்டே மகேஸ்வரி மற்றும் ரஞ்சித்தின் பள்ளிக்கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அழைத்துச் சென்றுள்ளார் அவர்களது தாயார்.

தற்போது அந்த மகேஸ்வரி என்ற சிறுமி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாராம். அவரைப் போல 7ம் வகுப்பில் நன்றாக படித்துக்கொண்டிருந்த சுகுணா என்ற மாணவியும் தனது கல்வியை இடையிலேயே நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றிருக்கிறார் என மகாலக்ஷ்மி குறிப்பிட்டுள்ளார்



இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள திருத்தத்தால் தற்போது நன்றாக படித்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் மனதிலும் பொதுத்தேர்வு குறித்த அச்சம் மேலோங்கியுள்ளது. நீங்களேல்லாம் தேர்ச்சி அடைந்துவிடுவீர்கள் என ஆசிரியர்கள் சமாதானப்படுத்தினாலும் 5 மற்றும் 8ம் வகுப்புக்கு நடத்தப்படவுள்ள பொதுத்தேர்வு 10,12ம் வகுப்புக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு போன்று இருக்கும் என நினைத்துக்கொள்கிறார்கள் அந்த பிஞ்சுக் குழந்தைகள்.
Read More »

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வால் கிராமப்புற மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாவர்

'5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வால் கிராமப்புற மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாவர்' என மக்கள் நீதி மையம் கட்சி கண்டித்துள்ளது.மக்கள் நீதி மையம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் அறிக்கை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் அறிவிப்பு வந்த உடனேயே அது மாணவர்களின் கல்விக்கு பாதகம் விளைவிக்கும் என எங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தோம். பொதுத் தேர்வு வாயிலாக மாணவர்களின் தேர்ச்சியை கணிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தோம்.


ஆனால் இன்று பொதுத்தேர்வுக்காக பல பெற்றோர் தாசில்தார் அலுவலகங்களில் ஜாதிச் சான்றிதழ் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வழிவகை செய்வதில் கவனம் செலுத்தாமல் அடிப்படை கல்வி கற்பிப்பதற்கு கூட பல தடைகளை அரசு தொடர்ந்து ஏற்படுத்துகிறது.இம்மாதிரியான திட்டங்கள் வாயிலாக மாணவர்களை அதுவும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அரசை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கிறது, என அதில் கூறப்பட்டுள்ளது.
Read More »

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' முறையிலான வருகைப்பதிவேடு எப்போது நடைமுறைக்கு வரும்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது:



ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' முறையிலான வருகைப்பதிவேடு பரிசீலனையில் உள்ளது. நிதி பற்றாக்குறையின் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.



ஆசிரியர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1 பிளஸ் 2 ஆசிரியர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். மீதி உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்
Read More »

குடியரசு தின சிறப்பு வாழ்த்துக்கவிதை - ஆசிரியர் திரு. சீனி.தனஞ்செழியன்


குடியரசில் குதூகலிப்போம்

எங்கள் நாடு
பூமியின் பூக்காடு
எங்கள் ரத்தநாளங்களில் புடைத்து நிற்கிறது தாயகப்பற்று
முன்னோர்களின் தியாகத்தில்
அளப்பறிய வீரத்தில்
அவர்களின் உதிரத்தில்
உயரக்கண்டோம் தேசியக்கொடி

இங்குதான்
திருநீறும் சிலுவையும் கைக்கோர்க்கும்
பசுமையும் காவியும்
பகைமை துறக்கும்
சம்மதமாய் எம்மதமும் 
ஏற்கும் எந்நாடு 
பொன்விளையும் புகழோடு

குண்டு வெடிக்குமோ என 
குமுறல் இல்லை
துப்பாக்கி தாக்கிடும் 
துயரங்கள் இல்லை
பதுங்கு குழி வாழ்க்கையில்லை
பயமே வாழ்வாய் ஆனதில்லை

யாவரும் பேசலாம்
தவறென்றால் யாவரையும் பேசலாம்
அனைவர்க்கும் உண்டிங்கு உரிமை
அதுவே எம் தாயகத்துப் பெருமை

நாங்கள் வெள்ளையையே வெறுத்தொதுக்கிய கறுப்பழகர்கள்
நிறபேதங்களால் மட்டுமல்ல
பிறபேதங்களாலும்
எங்களைப் பிளவுபடுத்த முடியாது
எங்கள் ஒற்றுமைச்சங்கிலி நீசபுத்திக்கயவர்களால் ஒருபோதும் உடையாது

இன மொழி மதம் கடந்த 
மகத்துவ மனிதர்கள் நாங்கள்
இந்தியா தானெங்கள் சுவாசம்
உலகே எங்கள் பெருமை பேசும்

தாயினும் மேலாய்
உணர்விலும் உளத்திலும் நிறைந்திருக்கிறது எங்களுக்கு தேசப்பற்று
உலகம் உய்யட்டும் எங்களைக் கற்று

கயமைகள் விலக 
நன்மைகள் பெருக
அமையட்டும் இக்குடியரசு
வறுமை நீங்கி வளமை நிரம்பக் கொட்டட்டும் வெற்றிமுரசு


சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
திருவலம்-632515,
வேலூர் மாவட்டம்.
Read More »

இன்று காலை 9 மணியளவில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் சிறப்போடு கொண்டாட தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள் - Proceedings!


ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் ஜனவரி 26 - ம் நாள் கொண்டாப்படுவது போல் 2020ஆம் ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் ஞாயிறு அன்று காலை 09 . 00 மணியளவில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் சீரோடும் , சிறப்போடும் அனைத்து அரசுப் பணியாளர்களும் கொண்டாடுதல் வேண்டும் .

மேலும் , தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்கள் ( PLASTICS ) உள்ள கொடிகளை பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of flag code of india 2002 - ன் படி செயல்பட்டு எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு நன்முறையில் கொண்டாட தலைமையாசிரியர்கள் கேட்டுக் மேலும் , தோள்கள் ( PLASTIC ) ஆத்துவது குறித்து பிரிவு " இடம் கொடுக்காமல் கொள்ள நமது இந்தியாவின் எதிர்காலம் இளைஞாகளின் கையில் உள்ளது . மேலும் இன்றைய மாணவர்கள் நாளைய இந்திய பெருநாட்டின் இளைஞர்களாய் வீற்றிருந்து வழிநடத்திச் செல்லும் கடமையும் பொறுப்பும் உள்ளதால் , வருங்கால சிறந்த இந்திய குடிமக்களை உருவாக்கும் கூடங்களாக செயல்படும் நம் பள்ளிகளில் நமது இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றையும் சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களையும் பட்ட இன்னல்களையும் தேசியக்கொடி வரலாற்றையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து உணர்வுப்பூர்வமாகவும் மகிழ்ச்சியும் எழுச்சியும் மிக்க விழாவாகவும் கொண்டாடப்பட வேண்டும் .

 குடியரசு தினத்தன்று பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்களாலும் , வண்ண மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும் . 26 . 01 . 2020 அன்றைய தினம் காலை தேசியக்கொடியினை பள்ளி வளாகத்தில் ஏற்றி மிக சிறப்பாக மேற்கூறப்பட்டவாறும் , நாட்டுப்பற்று , பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை விளக்கும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் . . சுதந்திர போராட்ட வரலாற்றினை விளக்கும் வகையில் கண்காட்சி , நாடகம் போன்றவை நடத்தப்பட வேண்டும் . பள்ளிகளில் நாட்டுப்பற்றையும் , தேசிய ஒருமைப்பாட்டையும் விளக்கும் வண்ணம் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி , ஓவியப்போட்டி மற்றும் விளையாட்டுப்போட்டி ஆகியவைகள் நடத்தப்பட்டு வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு குடியரசு தினவிழா அன்று பரிசுகள் வழங்கப்பட வேண்டும் .

நமது குடியரசு தினவிழா கொண்டாட்டத்தினை நினைவுகூறும் வகையில் பள்ளிகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு இடங்களை தேர்வு செய்து , போதிய இடவசதி இருப்பின் மரக்கன்றுகளை மாணவர்களைக் கொண்டு நடச்செய்து பராமரிக்கச் செய்யலாம்.

 இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றினை மாணவ மாணவிகள் அறியும் வகையில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களால் சொற்பொழிவு நடத்தப்பட வேண்டும் . குடியரசு தின நிகழ்ச்சிகளில் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் , அலுவலப் பணியாளர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் . குடியரசு தின நிகழ்ச்சிகளில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ - மாணவியர்களும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் . . பள்ளி வளர்ச்சியில் அக்கறையுள்ள முன்னாள் மாணவர்கள் இன்னாள் மாணவர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்கள் , அன்னையர் குழுக்கள் , பள்ளிப் புரவலர்கள் , சுதந்திர தின போராட்ட வீரர்கள் , அனைத்து சமுதாய பிரிவினர்கள் , மற்றும் மாண்புமிகு சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களை அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்ய வேண்டும் .

* தேசியக்கொடியின் மாண்பையும் , தேசிய கீதத்தின் மதிப்பையும் மாணாக்கர்களுக்கு எடுத்துரைத்து அதனை போற்றி பாதுகாக்கும் மாண்பினை ஊட்ட வேண்டும் . தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை அனைத்து மாணவ மாணவியர்களும் சேர்ந்து பாடவேண்டும் .

மேலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடுவது குறித்து குழு அமைத்து மாணவர்கள் மத்தியிலே நாட்டுப்பற்றையும் , தேசிய ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கும் வண்ணம் சிறப்பாக கொண்டாடி , குடியரசு தினம் கொண்டாடப்பட்ட விதத்தினை அறிக்கையாக தயார் செய்து குறைந்த பட்சம் ஒரு புகைப்படத்துடன் இணைத்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் 27 . 01 . 2020 அன்று ஒப்படைக்க வேண்டும் .
      - CEO,  நாகப்பட்டினம்.
Read More »

AEBAS - தொட்டுணர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறையில் வருகைப்பதிவு செய்யப்படாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை ( AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System ) அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் 22.01.2020 அன்று ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறையில் வருகைப்பதிவு செய்யப்படாத சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . வருகை பதிவு செய்யப்படாததற்கான விளக்கத்தினை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களின் தலைமை அலுவலர்கள் உரிய விளக்கத்தினை 28.01.2020 மாலை 04.00 மணிக்குள் இவ்வியக்ககத்திற்கு சமர்ப்பிக்குமாறும் , மேலும் முறையாக தினந்தோறும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் தொட்டுணர் கருவி முறையில் வருகை பதிவு செய்யப்பட்டுவருகிறதா என்பதை இணையதள வாயிலாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது .

இனிவரும் காலங்களில் இம்மாதியான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க சார்நிலை அலுவலர்களான மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது . மேலும் , தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவு சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் தினந்தோறும் பதிவுசெய்யப்படவேண்டும் . அவ்வாறு வருகை பதிவுசெய்யப்படாத அலுவலகங்கள் மற்றம் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கலாகிறது .

Read More »
 

Most Reading

Tags

Sidebar One