அரசு மற்றும் நிதியுதவி பள் ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் விவரங்களை காலதாமதம் செய்யாமல் இஎம் ஐ எஸ் சில் பதிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பிளஸ் 2 வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்களுக்கு கடந்த 2011-12ம் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத் தொகை வழங் கப்பட்டுவருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் பிளஸ் 2 வகுப்பை முடித்த மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கு மாணவர்களின் வங்கிக்கணக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த 5 லட்சத்து 35 ஆயிரத்து 82 பேருக்கு ₹ 107 கோடி பள்ளிக்கல்வி துறையால் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
Search
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment