தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 92.3 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
உங்கள் 12 ஆம் வகுப்புமுடிவுகள் ஆன்லைனில்எவ்வாறு பார்க்கலாம்
முதலில் நீங்கள் கீழ்கண்ட லின்ங் ஏதாவது ஒன்றினைகிளிக் செய்யுங்க
http://dge2.tn.nic.in/
http://tnresults.nic.in/
http://www.dge.tn.gov.in/index.html
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டும் எப்போதும் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழக திடீரென அறிவித்திருந்த நிலையில், தற்போது இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தேர்வு எழுதிய மாணவிகளில் 94.80% பேரும், மாணவர்களில் 89.41% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களில் 85.94% மாணவர்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மாவட்ட அளவில் திருப்பூர் மாவட்டம் 97.12% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 96.39% தேர்ச்சியுடன் இரண்டாவது இடமும், கோவை 96.39% தேர்ச்சியுடன் மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.
எப்போதும் போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
பாடவாரியான தேர்ச்சி சதவீதம்:
இயற்பியல் – 95.95%
வேதியியல் – 95.82%
உயிரியல் – 96.14%
கணிதம் – 96.31%
தாவரவியல் – 93.95%
விலங்கியல் – 92.97%
கணினி அறிவியல் – 99.51%
தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
மேலும் பிளஸ்1 தேர்வு முடிவுகளும் தற்போது வெளியாகி உள்ளது.
மார்ச், ஜூன் பிளஸ்1 பருவத்தேர்வில் தேர்சி பெறாத மாணவர்கள் 2020 மார்ச் மாதத்தில் எழுதிய அரியர்ஸ் தேர்வு முடிவுகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment