ஜேஇஇ மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறுவதால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஜேஇ.இ மெயின் தேர்வு வருகின்ற செப்., 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. செப்.,6ம் தேதி தேசிய பாதுகாப்பு அகாடமி (என்.டி.ஏ) தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. இதனால், இரு தேர்வுகளிலும் பதிவு செய்துள்ள மாணவர்கள் இரண்டிலும் எழுத முடியாத சூழலில் உள்ளனர். ஏதேனும் ஒரு தேர்வை வேறு தேதியில் வைக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பதிவில், ‛ஜேஇஇ மெயின் தேர்வு எழுதும் மாணவர்கள், தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வையும் எழுத பதிவு செய்துள்ள சூழலில், நிலைமையை ஆராய்ந்து சிக்கல் ஏற்படாதவாறு முடிவெடுக்கப்படும். இதனால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை இரு தேர்வுகளையும் மாணவர்கள் எழுதும் வகையில் ஆராய்ந்து முடிவெடுக்க தேசிய தேர்வு முமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' எனப் பதிவிட்டுள்ளார்.
Search
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment