கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .
ஆகஸ்ட் முதல் வாரத்தில் பதிவு செய்யலாம்
விண்ணப்பம் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை https://www.tnauonline.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பல்கலைக்கழகத்தின் விண்ணப்பத்தை இணையதளம் வழியாக பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
இன்ஜினீயரிங் படிப்புகள்:
முன்னதாக இன்ஜினீயரிங் கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்கவேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்கப்படும். பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org மாணவர்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்யலாம்.
கலை, அறிவியல் படிப்புகள்:
கலை,அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், http://tngasa.in மற்றும் http://tndceonline.org என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம் அதேபோன்று, தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு http://tngptc.in,http://tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment