Search

பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்பு - உயர்மட்ட குழு ஆலோசனை!

Friday, 3 July 2020



தமிழகத் தில் கொரோனாவைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்தமார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன. 10 , 11 ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு , மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கொரோனா பாதிப்பினை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து உயர்மட்ட குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

இதில் , கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கட்டுக்குள் வந்ததும் , பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும்போது , வகுப்பறைக்கு 20 மாணவ - மாணவிகள் மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரவைத்து வகுப்புகள் நடத்துவது , மீதமுள்ள மாணவர்களை தனித்தனி குழுவாக பிரித்து , காலை , மதியம் என வகுப்புகள் நடத்தலாமா ? அல்லது மாணவ மாணவிகளுக்கு மூன்று நாள் ஒருமுறை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவைத்து பாடங்கள் நடத்தலாமா ? என்பது போன்ற ஆலோசனை செய்யப் பட்டு வருகிறது . மேலும் , பள்ளிகளில் எவ்வாறு கொரோனா பாதுகாப்பு வழிமுறை களை ஆசிரியர்களும் , மாணவர்களும் கடைபிடிப்பது போன்றவைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One