Search
மாற்றுச் சான்றிதழ்கள் பதிவிறக்கம்: தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தல்
Friday, 3 July 2020
அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் மாற்றுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது தொடா்பாக தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வியின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சாா்பில், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தங்கள் பள்ளியில் கடைசி வகுப்பில் படிக்கும் மாணவா்கள் (5, 8, 10, 12) வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவா்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுப்பதற்கான விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை வலைதளத்தில் (எமிஸ்) பதிவு செய்ய தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவா்களின் விவரங்களை வகுப்பாசிரியா்கள் சரிபாா்த்து 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னா் தவறுகளை திருத்தம் செய்ய இயலாது. எனவே, தலைமையாசிரியா்கள் கூடுதல் கவனமுடன்
இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பணிகளையும் முடித்த பின்னா் இறுதியாக மாற்றுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளனா்.
Tags:
educationalnews,
KALVISEITHI
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment