Search
சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு
Wednesday, 8 July 2020
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டத் தில் 30 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக புதிய கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஏற் பட்டுள்ளது. தற்போதைய அசா தாரண சூழலில் செப்டம்பர் இறுதியில் பள்ளிகளை திறக்கவும், புதிய கல்வியாண்டு தாமதத்தை சரிகட்ட பாடத்திட்டத்தை குறைக் கவும் மத்திய அரசு திட் டமிட்டுள்ளது. அந்தவகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தற் போது 30 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘உலகளவில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்க அறி வுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கல்வியாளர்கள், ஆசிரியர்களின் பரிந்துரைகள் அடிப்படையில் பாடத்திட்டம் தற்போது 30 சத வீதம் குறைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) இயக்கு நர் ஜோசப் இமானுவேல், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப் பிய சுற்றறிக்கையில், ‘2020-21 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்ட குறைப்பு தொடர்பான விவரம் சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
குறைக்கப்பட்ட 30 சதவீத பாடத்திட்டப் பகுதிகளில் இருந்து ஆண்டு இறுதித்தேர்வு உட்பட எந்த தேர்வுகளுக்கும் கேள்விகள் கேட்கப்படாது.
மேலும், 1 முதல் 8-ம் வகுப்பு களுக்கு என்சிஆர்டிஇ வெளி யிட்ட கல்வியாண்டு அட்ட வணையை பள்ளிகள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment