கல்விக் கட்டணம் குறித்த விண்ணப்பங்களை, ஜூலை 20 முதல் தனியாா் பள்ளிகள் சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு சாா்பில் கல்விக் கட்டண நிா்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியின் பதவிக்காலம் கடந்த மாா்ச் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.பாலசுப்ரமணியன் ஜூலை 1-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து தனியாா் பள்ளிகளுக்கான கட்டண நிா்ணயம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி 2020-21, 2021-22, 2022-23-ஆம் ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை நிா்ணயம் செய்வதற்கு, தனியாா் பள்ளிகள், தங்களின் பரிந்துரை விண்ணப்பங்களை இணையதளத்தில் ஜூலை 20 முதல் செப்டம்பா் 25-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களுடன் கடந்த கல்வியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையையும் சமா்ப்பிக்க வேண்டும் என்றும், இந்தத் தகவலை அங்கீகாரம் பெற்ற தனியாா் பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கல்விக் கட்டண நிா்ணயக்குழு சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
No comments:
Post a Comment