சென்னை: ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடங்களை வீடியோவாக மாற்றி பதிவு செய்யும் பணிகளை தகுந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோ பதிவு செய்யும் பணியை தகுந்த ஆசிரியா்களைத் தேர்வு செய்து, மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் தற்போதைய நிலையில் பிளஸ் 2 வகுப்பு பாடங்களுக்கான வீடியோ படப் பதிவு மேற்கொள்ப்பட்டுள்ளது. இந்த பணியை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மேற்கொண்டன. இதையடுத்து 11ம் வகுப்பிற்கான அனைத்து பாடங்களையும் வீடியோ பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோவாக பதிவு செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் கலந்து ஆலோசித்து, கருத்தாளா்களைத் தெரிவு செய்து, படப்பதிவு மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு ஆசிரியரை அனைத்து அலகுகளுக்கான படப் பதிவினை மேற்கொள்ளச் செய்யாமல், வெவ்வேறு ஆசிரியா்களை பயன்படுத்த வேண்டும்
இதற்கு உரிய பாட ஆசிரியா்களைத் தெரிவு செய்வதுடன், அவா்களுக்குத் தலைமை ஆசிரியா்கள் வாயிலாக தகவலளித்து, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆசிரியா்களை அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம், பணிகள் தொய்வின்றி நடைபெற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment