Search

10 &12 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல் மற்றும் video lessons பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயல்முறைகள்!

Monday, 13 July 2020


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்கப்பட உள்ளது. அதற்காக மேற்கண்ட வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்கள் 13.07.2020 மற்றும் 14.07.2020 தேதிகளில் பள்ளிக்கு வருகை புரிந்து உரிய ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடன் HiTech Lab மூலம் Video Lesson கள் 15.07.2020 முதல் பதிவிறக்கம் செய்து தரப்பட உள்ளது . இதற்காக மாணவர்கள் தங்களுடைய மடிக்கணினியை பள்ளிக்கு வருகை புரியும் போது கொண்டு வரவேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது . இதுபோன்றே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் Video Lesson கள் பதிவிறக்கம் செய்து தரவேண்டும் என்பதால் அப்பள்ளியில் பணியாற்றும் முதகலைபாட / கணினி ஆசிரியர் Laptop அல்லது Pendrive எடுத்துக் கொண்டு அருகாமையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று HiTech Lab மூலம் Video Lesson களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அவர்கள் தங்களுடைய பள்ளிக்குச் சென்று அவர்களுடைய கணினி ஆய்வகத்தில் உள்ள கணினிகளில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியம் மாணவர்களுக்கு அவர்களுடைய மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தரவேண்டும். எனவே அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். இப்பணி மிகவும் இன்றியமையாதது என்பதால் எவ்வித சுணக்கமுமின்றி பணிகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து தரவேண்டும். உரிய மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவித்து நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One