பள்ளிக் கல்வி - 74வது சுதந்திர தின விழா கொண்டாடுவது சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
வழிகாட்டு நெறிமுறைகள் :
1. அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை , சமூக இடைவெளியியைப் பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும்.
2. அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல் வேண்டும்.
3. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன் களப் பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள் , சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சேவையினைப் பாராட்டும் பொருட்டு அவர்களை மேற்படி விழாவிற்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.
4. கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணமடைந்த நபர்களையும் மேற்படி விழாவிற்கு அழைக்கலாம்.
குறிப்பு :
* சுதந்திர தின விழாவின் போது , கொரோனா தொற்று பாதுகாப்பு / தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல் , முகக்கவசம் அணிதல் மற்றும் கூட்டங்களைத் தவிர்த்தல் வேண்டும்.
* கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வசதி ஏற்படுத்துதல் மற்றும் கோவிட் -19 சார்பான சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றுதல் வேன்டும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தின விழாவினை எளிமையாக கொண்டாடி அதன் விவரத்தினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கும் படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
01.07.2020 முதல் 30.09.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நீடிப்பு. ( GO NO : 306 , DATE : 27.07.2020 )
ORDER :
1. In the Government Order first read above , orders were issued fixing the rate of interest on the accumulations at the credit of subscribers of General Provident Fund ( Tamil Nadu ) at 7.1 % ( Seven point one percent ) for the period from 1st April , 2020 to 30th June , 2020 .
2. The Government of India , in its resolution second read above , announced that during the year 2020-2021 , accumulation at the credit of subscribers to the General Provident Fund and other similar funds shall carry interest at the rate of 7.1 % ( Seven point percent ) with effect from 1st July , 2020 to 30th September , 2020 . one
3. The Government now direct that the rate of interest on the accumulation at the credit of the subscribers to General Provident Fund ( Tamil Nadu ) shall carry interest at the rate of 7.1 % ( Seven point one percent ) with effect from 1st July , 2020 to 30th September , 2020 .
4. The rate of interest on belated final payment of Provident Fund accumulation remaining unpaid for more than three months of its becoming payable shall be at the same rates as ordered in para - 3 above .
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -1 ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
இணை இயக்குனர்கள் மாற்றம்:
திரு. கோபிதாஸ் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர்.
திரு. நரேஷ் இணை இயக்குனர் தொழிற்கல்வி.
திருமதி. சுகன்யா இணை இயக்குனர் இடைநிலைக்கல்வி.
திருமதி. ஸ்ரீதேவி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்.
கொரோனா கால ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேள்வி பெரும்பாலான பெற்றோரிடமிருந்து எழும்பியது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தும் கொரோனா முற்றிலும் நீங்கிய பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்ற சொல்லப்பட்டு வந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
அமைச்சர் கூறுகையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு மார்க் சீட்டை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . 1-9ஆம் ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர் கருத்து கேட்ட பின் பாட புத்தகம் வழங்கப்படும். கொரோனா தொற்று குறைந்தவுடன் பள்ளி திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார்.
சென்னை : தமிழகத்தில் உள்ள 102 அரசு கல்லூரிகளில் சேர இதுவரை ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வருகிற 31-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் அனுமதித்த இடங்களைவிட 20 மடங்கு விண்ணப்பிங்கள் அரசு கல்லூரிகளில் குவிந்தன.மாணவர்கள் விருப்பத்தை பயன்படுத்தி புரோக்கர்கள் கொள்ளை வசூலில் ஈடுபட வாய்ப்புள்ளதால் மாணவர்களிடம் பணம் பறிக்கும் போக்கை தடுத்து நிறுத்த கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜேஇஇ மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறுவதால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஜேஇ.இ மெயின் தேர்வு வருகின்ற செப்., 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. செப்.,6ம் தேதி தேசிய பாதுகாப்பு அகாடமி (என்.டி.ஏ) தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. இதனால், இரு தேர்வுகளிலும் பதிவு செய்துள்ள மாணவர்கள் இரண்டிலும் எழுத முடியாத சூழலில் உள்ளனர். ஏதேனும் ஒரு தேர்வை வேறு தேதியில் வைக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பதிவில், ‛ஜேஇஇ மெயின் தேர்வு எழுதும் மாணவர்கள், தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வையும் எழுத பதிவு செய்துள்ள சூழலில், நிலைமையை ஆராய்ந்து சிக்கல் ஏற்படாதவாறு முடிவெடுக்கப்படும். இதனால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை இரு தேர்வுகளையும் மாணவர்கள் எழுதும் வகையில் ஆராய்ந்து முடிவெடுக்க தேசிய தேர்வு முமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' எனப் பதிவிட்டுள்ளார்.
ஹிஜ்ரி 1441 துல் கஃதா மாதம் 29 ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 21-07-2020 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டவில்லை. ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 23-07-2020 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சியிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா ( பக்ரீத் ) சனிக்கிழமை 01-08-2020 தேதி கொண்டாடப்படும்.
நோட்டீஸ் வந்தால் நேரில் வரவேண்டாம் வரித்துறை தகவல் புதுடெல்லி வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் பெரும்பாலானோர் பதற்றமாகி விடுகின்றனர் .
அப்படி நோட்டீஸ் வந்தால் பதற்றம் அடைய தேவையில்லை . அதேபோல் உடனே அருகில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை .
இணைய தளம் மூலம் உங்களுடைய நோட்டீஸுக்கான விளக்கத்தை வழங்கலாம் என வருமான வரித் துறை கூறியுள்ளது . மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியபடி இணையதளம் மூலமாக வருமான வரிக் கணக்கை மதிப்பீடு செய்யும் நடைமுறை கடந்த அக்டோபரில் அமல்படுத் தப்பட்டது .
இந்த நடைமுறையின் மூலம் வருமான வரிக் கணக்கு தொடர்பாக இதுவரை 58,319 வழக்குகளை விசாரிக்க அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இவற்றில் இதுவரை 7,116 வழக்குகள் இணையதளம் மூலமாகவே தீர்வு காணப் பட்டுள்ளது .
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 60 உயர்த்த வேண்டும் என்று ஆசிரியர்களின் பலநாள் கோரிக்கையானது தற்சமயம் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி K. பழனிசாமி ஐயா அவர்கள் தற்சமயம் 59 ஆக உயர்த்தி உள்ளார்.இதனை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சேலம் மாவட்டத்தின் சார்பாக மிகவும் மன மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.இந்த அறிவிப்பால் தாமதமாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மேலும் ஒரு ஆண்டு காலம் கல்விச்சேவையில் ஈடுபட நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிவுள்ளார். இதேபோல் 9 ஆண்டுகள் , 19 ஆண்டுகள் , 29 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற இருந்த ஆசிரியர்களுக்கு இந்த ஓராண்டு நீட்டிப்பு மிகப்பெரிய மன மகிழ்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.இந்த அறிவிப்பால் ஆசிரியர்களும் , அரசு ஊழியர்களும் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர். மேலும் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வை கருத்தில் கொண்டு , போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் தண்டனைகளை ரத்து செய்ய , கனிவோடு பரிசீலிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு தா.அ.கமலக்கண்ணன் , மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் ( TNGTA ) , சேலம் மாவட்டம்
CM CELL Reply :
போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்வது என்பது அரசின் கொள்கை முடிவிற்குட்பட்டதாகும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ( கோப்பு எண் .16197 / கே 1 / 2020 , ப.ம.நி.சீ ( கே ) துறை , நாள் 15.07.2020 )
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்தும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்தும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது
இந்நிலையில், அடுத்த மாதம் இறுதிக்குள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 27-ஆம் தேதி 12ஆம் வகுப்பு மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறினார்.
மேலும், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்ட பிறகு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நோட்டீஸ் வந்தால் நேரில் வரவேண்டாம் வரித்துறை தகவல் புதுடெல்லி வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் பெரும்பாலானோர் பதற்றமாகி விடுகின்றனர் .
அப்படி நோட்டீஸ் வந்தால் பதற்றம் அடைய தேவையில்லை . அதேபோல் உடனே அருகில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை .
இணைய தளம் மூலம் உங்களுடைய நோட்டீஸுக்கான விளக்கத்தை வழங்கலாம் என வருமான வரித் துறை கூறியுள்ளது . மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியபடி இணையதளம் மூலமாக வருமான வரிக் கணக்கை மதிப்பீடு செய்யும் நடைமுறை கடந்த அக்டோபரில் அமல்படுத் தப்பட்டது .
இந்த நடைமுறையின் மூலம் வருமான வரிக் கணக்கு தொடர்பாக இதுவரை 58,319 வழக்குகளை விசாரிக்க அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இவற்றில் இதுவரை 7,116 வழக்குகள் இணையதளம் மூலமாகவே தீர்வு காணப் பட்டுள்ளது .
TNGASA 2020 - பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணாவர்கள் உயர் கல்வி பயில ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முன்பாக தயார் நிலையில் அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும். அதற்கு உதவியாக இந்த முன்தயார் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி - வைத்துக்கொண்டால் நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இதில் நீங்கள் தயாராக வைத்துள்ள தகவல்கள் உதவியாக இருக்கும்.
சென்னை : மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை போல, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், ‘ஆன்லைன்’ பதிவு மற்றும் ‘ஆன்லைன் கவுன்சிலிங்’ அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஆன்லைன் பதிவு நேற்று துவங்கியது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.முற்றுப்புள்ளிஆனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, ஒவ்வொரு கல்லுாரிக்கும் சென்று, நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.
அந்தந்த கல்லுாரிகளின் முதல்வர்கள் முடிவு செய்து, சேர்க்கை வழங்குவர். இதில், பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருந்தாலும் இடம் கிடைக்கும். சில இடங்கள், சிபாரிசுகளின் அடிப்படையில் ஒதுக்கப்படும். சில கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையில், முறைகேடு பிரச்னைகள் எழுவதும் வழக்கம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக உயர் கல்வித்துறை அதிரடி முடிவு எடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு மற்றும் கவுன்சிலிங்கை, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.முன்னுரிமைஇதற்கான வழிமுறைகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
ஆன்லைன் விண்ணப்ப பதிவு, http://tngasa.in என்ற இணையதளத்தில், நேற்று துவங்கியது. ஒவ்வொரு மாணவரும், தாங்கள் படிக்க விரும்பும் மாவட்டத்தையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்து, அதில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடப் பிரிவுகளையும் குறிப்பிடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கல்லுாரிகளையும், மாணவர்கள் பதிவு செய்யலாம்.
மாணவர்கள் பதிவு செய்யும் கல்லுாரிகளில், அவர்களின் மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவுகளின் முன்னுரிமைப்படி ஒதுக்கப்படும்.ஒவ்வொரு கல்லுாரியும், பதிவு செய்த மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தர வரிசை பட்டியலை வெளியிடும்; அதன் பின் ஒதுக்கீடு வழங்கப்படும்.
மாணவர்கள் அந்த ஆணையை பெற்று, கல்லுாரிகளில் சேரலாம் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. பதிவு செய்வது எப்படி? வரும், 31ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் பதிவு செய்பவர்கள், தங்களின் சான்றிதழ்களின் அசல் பிரதிகளை, வரும், 25ம் தேதி முதல், ஆகஸ்ட், 5க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் விண்ணப்பத்தை, தங்கள் கணினி அல்லது மொபைல் போனில் இருந்து பதிவு செய்யலாம். அதற்கு வசதி இல்லாதவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் அமைக்கப்பட்டுள்ள, சேவை மையங்களின் வழியாக பதிவு செய்யலாம்.
வணிக நிருபர் மேற்பார்வையாளர்களை நியமிக்க விண்ணப்பங்களை பாங்க் ஆப் பரோடா அழைத்துள்ளது. இந்த நியமனம் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படுகிறது…!
பாங்க் ஆப் பரோடா ஆட்சேர்ப்பு 2020: வணிக நிருபர் மேற்பார்வையாளர்களை நியமிக்க பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) அழைப்பு விடுத்துள்ளது. இந்த நியமனம் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படுகிறது. இந்த பதவிகள் குறித்த தகவல்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் இந்த பதவிகளுக்கு 31 ஜூலை 2020-க்குள் விண்ணப்பிக்கலாம்.
மேற்பார்வையாளர்களின் 49 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை வங்கி வரைந்துள்ளது.
இதில், பருச், மஹிசாகர் மற்றும் வல்சாத் மாவட்டத்திற்கு 4, நர்மதாவுக்கு 2 மற்றும் தபசி மாவட்டத்திற்கு தலா ஒரு, தாதர் மற்றும் நகர் ஹவேலிக்கு 3 மற்றும் சோட்டா உதய்பூர் மாவட்டத்திற்கு 3, வதோதரா மாவட்டத்திற்கு 3, தஹோத் மற்றும் பஞ்சமஹலுக்கு 6 பதவிகள்.
ALSO 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… மாதம் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்!!
BOB இல் மேற்பார்வையாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேட்பாளர்கள் கணினி (MS Office, Email, Internet, முதலியன) அறிவைப் பெற்றிருக்க வேண்டும். வேட்பாளர் அவர் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் வசிப்பவராக இருந்தால் நல்லது. விண்ணப்பிக்கும் வேட்பாளரின் சொந்த மொழியை வேட்பாளர் அறிந்திருக்க வேண்டும்.
நேர்காணலின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆட்சேர்ப்பு பணிக்கு எழுத்துத் தேர்வு எதுவும் நடத்தப்படாது. இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம் https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Business-Correspondents. மேலும் வயது வரம்பு மற்றும் பலவற்றைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் சரிபார்க்கலாம்
இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் திருவாடானை வட்டம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம்: வட்டாச்சியர் அலுவலகம்
மேலாண்மை: தமிழக அரசு
பணி : கிராம உதவியாளர் ( village assistant)
பணி இடங்கள்: இராமநாதபுரம், திருவாடானை
மொத்த காலிப்பணியிடங்கள் : 31
கல்வி தகுதி :
5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ. 11,100 முதல் ரூ. 35,100 வரை
வயது வரம்பு:
21 வயதிற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://ramanathapuram.nic.in/ என்ற அதிகாரபூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு வசதியாக இருக்குமா என்பது குறித்து பெற்றோரின் கருத்துக்களைக் கோரி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது.டெல்லியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஜூலை 31 வரை மூடப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில் தலைநகரில் இருந்து ஒரு பெற்றோர் சங்கம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று கடிதம் எழுதியது. 2020-2021 கல்வியாண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படும் வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஜூலை, 17 ல், அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்விச் செயலாளர்கள், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றனர், ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து பெற்றோரின் கருத்துக்களைக் கோருகிறது. இது குறித்து மாநில அரசு இதுவரை பதிலளிக்கவில்லை என்று டெல்லி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று டெல்லி பெற்றோர் சங்கம் போக்ரியலுக்கு கடிதம் எழுதியதில் “அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கான உத்தரவு மார்ச் 16 அன்று நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இருந்தபோது செய்யப்பட்டது. இப்போது, இது 10 லட்சம் வழக்குகளைத் தாண்டிவிட்டது. இந்த சூழ்நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து வேண்டுமென்றே சிரிப்பதுதான் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பரீட்சை இல்லாமல் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகள் மூலம் சோதிக்கப்பட வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை என்றால் போர்டு தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.
மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் Fit India Movement சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டு , மேற்கண்ட இணையதள முகவரியில் இப்பொருள் சார்பாக அனைத்து பள்ளிகளும் Fit India School Certificate , Fit India Flag , Schools with either 3 Star or 5 Star Rating போன்ற விவரங்களை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து , உள்ளீடு செய்வதற்குண்டான விவரங்களின் வழிமுறைகளும் அதன் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு 24.01.2020 நாளிட்ட கடிதத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் , நாளது வரை குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது ஏற்புடையது அல்ல.எனவே இதுவரை மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் , உடன் பதிவேற்றம் செய்திடும் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இப்பணி குறித்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் www.fitindia.gov.inஎன்ற இணையதளத்தில் 25.07.2020 – க்குள் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , இது சார்ந்து , அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தமைக்கு உடன் ஒப்புதல் கடிதம் அளிக்குமாறும் , அனைத்துப் பள்ளிகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததை உறுதி செய்து அதன் அறிக்கையினை 25.07.2020 அன்று மாலை 3 மணிக்குள் இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு ( jdnsed@nic.in ) அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக் கல்வி – மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (NMMS)- 2020-2021 – தேர்வு நாள்: 15.12.2019- தேர்வு முடிவுகள் வெளியீடு- பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டமான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு ( NMMSS Exam ) கடந்த 15.12.2019 அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது . தேர்வில் பங்குபெற்று , கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப் பட்டியல் மாவட்டம் வாரியாக பெறப்பட்டுள்ளது . இத்தேர்வுப்பட்டியல் தகவலுக்காகவும் , தக்க நடவடிக்கைக்காகவும் இக்கடிதத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது . மேலும் , இத்தேர்வில் தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் 9 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியை தொடரும் பொருட்டு அவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவதற்கான அனைத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தலாகிறது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .
ஆகஸ்ட் முதல் வாரத்தில் பதிவு செய்யலாம்
விண்ணப்பம் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை https://www.tnauonline.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பல்கலைக்கழகத்தின் விண்ணப்பத்தை இணையதளம் வழியாக பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
இன்ஜினீயரிங் படிப்புகள்:
முன்னதாக இன்ஜினீயரிங் கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்கவேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்கப்படும். பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org மாணவர்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்யலாம்.
கலை, அறிவியல் படிப்புகள்:
கலை,அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், http://tngasa.in மற்றும் http://tndceonline.org என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம் அதேபோன்று, தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு http://tngptc.in,http://tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சேர எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது வரை மூடப்பட்டு உள்ளது. இதனிடையில் தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு இணையத்தளம் வாயிலாக ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் www.tngasa.inமற்றும் www.dceonline.org என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜூலை 25 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மாணவர்கள் இணையத்தளம் வாயிலாக சான்றிதழ்களை பதிவேற்றலாம் என்றும் பொதுப்பிரிவினர் 50 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று(ஜூலை 20) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறை இயக்குனரகத்தில், துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை, தலைமை செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில், பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ், இயக்குனர் கண்ணப்பன் பங்கேற்கின்றனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
சென்னை: ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடங்களை வீடியோவாக மாற்றி பதிவு செய்யும் பணிகளை தகுந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோ பதிவு செய்யும் பணியை தகுந்த ஆசிரியா்களைத் தேர்வு செய்து, மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் தற்போதைய நிலையில் பிளஸ் 2 வகுப்பு பாடங்களுக்கான வீடியோ படப் பதிவு மேற்கொள்ப்பட்டுள்ளது. இந்த பணியை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மேற்கொண்டன. இதையடுத்து 11ம் வகுப்பிற்கான அனைத்து பாடங்களையும் வீடியோ பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோவாக பதிவு செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் கலந்து ஆலோசித்து, கருத்தாளா்களைத் தெரிவு செய்து, படப்பதிவு மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு ஆசிரியரை அனைத்து அலகுகளுக்கான படப் பதிவினை மேற்கொள்ளச் செய்யாமல், வெவ்வேறு ஆசிரியா்களை பயன்படுத்த வேண்டும்
இதற்கு உரிய பாட ஆசிரியா்களைத் தெரிவு செய்வதுடன், அவா்களுக்குத் தலைமை ஆசிரியா்கள் வாயிலாக தகவலளித்து, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆசிரியா்களை அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம், பணிகள் தொய்வின்றி நடைபெற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை’ என, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை. மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே, பாடம் படிக்கும் வகையில், ‘வீடியோ’ பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் தரப்பில், ‘ஆன்லைனில்’ வகுப்புகளை நடத்துகின்றன. இந்நிலையில், ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், விரைவில் பள்ளிகளை திறந்து, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக, மத்திய அரசின் சார்பில், மாநில பள்ளி கல்வித் துறை அதிகாரிகளிடம், ஆன்லைன் வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. அதில், பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து, விவாதிக்கப்பட்டது.அப்போது, ஒவ்வொரு மாநில அரசும், தங்கள் மாநிலத்தில், கொரோனா தொற்று நிலையை பொறுத்து, பள்ளிகளை திறக்கும் தேதியை முடிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக, பெற்றோர் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டு பெற வேண்டுமென, மத்திய மனிதவள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து, முதற்கட்ட அறிக்கையை, ஒவ்வொரு மாநில அரசும் தாக்கல் செய்துள்ளன. அந்த அறிக்கையில், ஒவ்வொரு மாநிலமும், பள்ளிகளை மீண்டும் திறக்க உள்ள மாதத்தை அறிவித்துள்ளன.
அதில், ‘பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என, தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து, இந்த வாரத்தில் முடிவு செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு புதிய பாடத்திட்ட அடிப்படையில் முதல் முறையாக நடைபெற்றது. முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களின் வினாத்தாள் கடுமையாக இருந்ததாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
இதனால் இந்த பாடங்களில் இந்த ஆண்டு 100க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.
இந்த நிலையில் மாநில பாடத்திட்டத்தை பொறுத்தவரை 170-க்கும் அதிகமாக கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் குறைவாகவே உள்ளனர். அதே சமயம் கட் ஆப் மதிப்பெண் 150-க்கும் குறைவாக பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
எனவே குறைந்த கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கட் ஆப் மதிப்பெண் 150-க்கு குறைவாக பெற்ற MBC, SC, ST, SCA மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள 25 முன்னனி பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்கிற கருத்தை முன்வைக்கின்றனர்.
மேலும், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை காட்டிலும் சிபிஎஸ்சி மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு அதிகரித்துள்ள போதிலும், சிபிஎஸ்சிஇ மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், இருப்பினும் அதிகளவில் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பொறியியல் இடம் கிடைக்கும் என்கிற கருத்தை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்
சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச்சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 272 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம்: நியாய விலைக் கடை
பணி : விற்பனையாளர்
காலியிடங்கள்: 80
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: நியமன நாளிலிருந்து தொகுப்பு ஊதியம் மாதம் ரூ.5000, ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.4,300 – 12,000
பணி: கட்டுநர்
காலியிடங்கள்: 192
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: நியமன நாளிலிருந்து தொகுப்பு ஊதியம் மாதம் ரூ.5000, ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.3,900 – 11,000
வயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதிற்குள்பட்டவாரகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், எண்.91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை-600018 என்ற முகவரியில் 31.07.2020 வரை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் பணிக்கு ரூ.150, கட்டுநர்கள் பணிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம், கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், எண்.91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை – 600018 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2020 அன்று மாலை 5.45க்குள் சென்று சேர வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.chndrb.in/doc_pdf/Notification_salesmanpacker.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
தேசிய வெப்ப மின் கழகம் தற்பொழுது புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தேசிய வெப்ப மின் கழகம் விளம்பர எண்: 03/2020 மொத்த காலியிடங்கள்: 275 பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி: Engineers – 250 சம்பளம்: மாதம் ரூ. 50,000 -1,60,000
பணி: Assistant Chemist – 25 சம்பளம்: மாதம் ரூ.40,000 -1,40,000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப முறை: www.ntpccareers.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விண்ணப்ப கட்டணம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index_files/Employment%20News%20Ad%20English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2020
ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் ? வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள். மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனிதவள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்.
Feedback of parents concerning to reopening of schools – regarding
I am directed to refer to the subject matter with a request to furnish feedback of parents of school going children on the following points by 20.07.2020 ( Monday ) positively :
i . What is the likely period when they will be comfortable with reopening of schools – August / September October , 2020
ii . What are the parents expectations from Schools – as and when they reopen.
iii . Any other feedback / remarks in this regard.
2 . You are requested to kindly furnish information on the above points through e – mail at coordinationeel@gmail.com or rsamplay.edu@nic.in
சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வி மாவட்டத்தை மையமாக கொண்டு வாட்ஸ்அப் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது . இக்குழுவில் உள்ள ஆத்தூர் அரசுப்பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஒருவர் , சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் பற்றி மீம்ஸ் பகிர்ந்துள்ளார் .
இதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி விசாரித்தார் . இதையடுத்து அந்த ஆசிரியரும் , குழுவை நிர்வகித்து வந்த ( அட்மின் ) பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மற்றொரு ஆசிரியரும் இடைப்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றுப்பணியாக தூக்கியடிக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் ? வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள். மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனித வள் மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்.
Feedback of parents concerning to reopening of schools - regarding
I am directed to refer to the subject matter with a request to furnish feedback of parents of school going children on the following points by 20.07.2020 ( Monday ) positively :
i . What is the likely period when they will be comfortable with reopening of schools - August / September October , 2020
ii . What are the parents expectations from Schools - as and when they reopen.
iii . Any other feedback / remarks in this regard.
2 . You are requested to kindly furnish information on the above points through e - mail at coordinationeel@gmail.com or rsamplay.edu@nic.in
பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மின்கட்டணவிவரத்தை இணையதளத்தில்தெரிந்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.tangedco.gov.in என்ற இணையதளபகுதியில் பில் ஸ்டேடஸ் என்ற பகுதியில்அறியலாம் என மின் வாரியம்அறிவித்துள்ளது
ஓய்வு பெறும் தினத்துக்கு அடுத்த நாளில் ஊதிய உயா்வு வரவு வைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மீளப்பெறுவது என்பது குறித்த புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அண்மையில் வெளியிட்டது. அதன் விவரம்:-
அரசுத் துறைகளில் குறைந்த நிலையிலான பணிகளைச் சோந்த ஊழியா்களுக்கு அவ்வப்போது ஊதிய உயா்வுகள் அளிக்கப்படும்
இந்த ஊதிய உயா்வுகள் சில நேரங்களில் அவா்கள் ஓய்வு பெறும் நாளுக்குப் பிந்தைய தினத்தில் கிடைக்கும்படி அமைந்து விடுகிறது. இதனை எப்படி திரும்பப் பெறுவது என்பது தொடா்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது கேள்வி எழுப்பி இருந்தது.
இதுகுறித்து, தீவிரமாக ஆராய்ந்த தமிழக அரசு இந்தத் தொகையை திரும்பப் பெற கால அளவு எதையும் நிா்ணயிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. அதேசமயம், ஓய்வு பெற்றவா்களுக்கு கூடுதலான தொகைகள் ஏதேனும் வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அதனை அவா்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை தெரிவித்துள்ளது
ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை விடியோ பதிவு செய்ய தகுந்த ஆசிரியா்களைத் தோவு செய்து, பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
பள்ளிக் கல்வித் துறையில், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக ஏற்கெனவே பிளஸ் 2 வகுப்பு பாடங்களுக்கான விடியோ படப் பதிவு மேற்கொள்ளப்பட்டு, மின் பாடப் பொருளாக மாற்றப்பட்டு, பள்ளிகளில் உள்ள உயா் தொழில்நுட்ப ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து பிளஸ் 1 வகுப்பு அனைத்து பாடங்களுக்கான விடியோ பதிவு மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பாடப் பொருள்களுக்கான விடியோ படப் பதிவும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் கலந்து ஆலோசித்து, கருத்தாளா்களைத் தெரிவு செய்து, படப்பதிவு மேற்கொள்ள ஆவன செய்யுமாறு, முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
மேலும் குறிப்பிட்ட ஒரு ஆசிரியரை அனைத்து அலகுகளுக்கான படப் பதிவினை மேற்கொள்ளச் செய்யாமல், வெவ்வேறு ஆசிரியா்களை பயன்படுத்துதல் வேண்டும். இதற்கு உரிய பாட ஆசிரியா்களைத் தெரிவு செய்வதுடன், அவா்களுக்குத் தலைமை ஆசிரியா்கள் வாயிலாக தகவலளித்து, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆசிரியா்களை அனுப்பி வைத்து, பணிகள் தொய்வின்றி நடைபெற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் அதற்காக 38 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது. முதல் முறையாக கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
கலை, அறிவியல் படிப்புகளில் சேர www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதளங்களில் ஜூலை 20 ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர www.tngptc.in மற்றும் www.tngptc.com என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதுகுறித்த சந்தேங்கள் இருந்தால் 044-22351014 மற்றும் 044-223510115 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு 38 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் 100 பழங்குடியின மாணவ / மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் , அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயப்படிப்பில் ( D.T.Ed. , ) சேர்த்து அவர்கள் அப்பட்டயப்படிப்பை முடித்த பின் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ( Tamil Nadu Teachers Eligibility Test ) வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்த்து , அத்தகுதித் தேர்வில் வெற்றி பெறும் பழங்குடியின இடைநிலை ஆசிரியர்கள் தர வரிசை அடிப்படையில் இத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடத் தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது , என இத்திட்டத்தின் கீழ் 100 மாணாக்கர் கல்வியியல் பட்டயப் படிப்பு பயில்வதற்கு ஆகும் கல்விக் கட்டணம் , புத்தகக் கட்டணம் , விடுதிக் கட்டணம் , சீருடைக் கட்டணம் , இதரச் செலவினங்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் ஏற்படும் செலவினங்கள் முழுவதையும் அரசே ஏற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-2020 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் / மாணவியர்களுக்கு பெறப்பட்ட தொகுப்பு மதிப்பெண் பட்டியலின் ( Consolidated Mark Statement ) அடிப்படையில் மேற்கண்ட திட்டத்தின் விவரங்களை தங்கள் மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பழங்குடியினர் மாணவர்களுக்கு தெரிவித்தும் மற்றும் பள்ளியின் விளம்பர பலகையில் அறிவிப்பு செய்யுமாறும் , விருப்பமுள்ள பழங்குடியினர் மாணவர்களிடமிருந்து விருப்ப கடிதம் ( Willingness ) பெற்று இம்மாத 31.07.2020 குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு பிரச்சினையால் ஐஐடி மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அதாவது ஐஐடிக்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில், கூட்டு சேர்க்கை வாரியம் எனப்படும் ஜேஏபி நடத்தும் JEE மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பது போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் ஏராளமான மாநிலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு அவசியமில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ரமேஷ் பொக்ரியால் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ”இந்தியா முழுவதும் ஏராளமான கல்வி வாரியங்கள் தங்களின் 12-ஆம் வகுப்புத் தேர்வைப் பகுதியளவு ரத்து செய்துள்ளன. இந்நிலையில், IIT மாணவர்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளை இந்த ஆண்டில் ஜேஏபி தளர்த்தியுள்ளது. JEE மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தகுதிவாய்ந்த மாணவர்கள், 12-ம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் பிரச்சினையில்லை. அவர்கள் IIT-இல் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட JEE மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், JEE மேம்படுத்தப்பட்ட தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
12 ஆம் வகுப்பிற்கு 27 ஆம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாசப்பகவுண்டன்புதூர் பள்ளியில் சத்துணவுக்காக அரிசி, பருப்புகள் மற்றும் பர்னிச்சர்களையும் விளங்கோம்பை பகுதி பழங்குடியின மாணவர்கள் 19 பேருக்கு சாதிச்சான்றுகளையும் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்புக் காலம், ஊரடங்கை கருத்தில் கொண்டு ஓராண்டில் இருந்து 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தமிழகத்தில் 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் இலவச கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் செல்போன் மற்றும் கணினி வழியாக பாடங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் படிக்கும் நிலை 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட விலையில்லா பாடநூல்களின் எண்ணிக்கை விவரத்தினை,
படிவம் 1 ல் குறிப்பிட்டுள்ளவாறு தலைமையாசிரியர்களிடமிருந்து பெற்று அதனை தொகுத்து படிவம் 2 ல் பூர்த்தி செய்து படிவம் 2 -னை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் esec.tndse@nic.in மற்றும் dsetamilnadu@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு 22.07.2020 புதன் கிழமை பிற்பகல் 2.00 மணிக்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் .
BE, B.SC பயின்றவர்களுக்குமத்திய அரசு வேலை.. கடைசி தேதிஜூலை 31..மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) நிறுவனத்தில் காலியாக உள்ள சந்தைப்படுத்தல் அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.1.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)மேலாண்மை : மத்திய அரசுபணி : சந்தைப்படுத்தல் அதிகாரிமொத்த காலிப் பணியிடங்கள் : 10கல்வித் தகுதி : B.Sc Agriculture, B.E, B.Tech துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1.40,000 வரையில்அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.rcfltd.com/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பக் கட்டணம் :பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.700மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.rcfltd.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்
கல்விக் கட்டணம் குறித்த விண்ணப்பங்களை, ஜூலை 20 முதல் தனியாா் பள்ளிகள் சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு சாா்பில் கல்விக் கட்டண நிா்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியின் பதவிக்காலம் கடந்த மாா்ச் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.பாலசுப்ரமணியன் ஜூலை 1-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து தனியாா் பள்ளிகளுக்கான கட்டண நிா்ணயம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி 2020-21, 2021-22, 2022-23-ஆம் ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை நிா்ணயம் செய்வதற்கு, தனியாா் பள்ளிகள், தங்களின் பரிந்துரை விண்ணப்பங்களை இணையதளத்தில் ஜூலை 20 முதல் செப்டம்பா் 25-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களுடன் கடந்த கல்வியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையையும் சமா்ப்பிக்க வேண்டும் என்றும், இந்தத் தகவலை அங்கீகாரம் பெற்ற தனியாா் பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கல்விக் கட்டண நிா்ணயக்குழு சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓட்டுநர் பணியிடத்துக்குவேலைவாய்ப்பு..மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் காட்டன் காப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதோடு ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : காட்டன் காப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டுமேலாண்மை : மத்திய அரசுபணி : ஓட்டுநர்காலிப் பணியிடங்கள் : 01கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.தகுதி : விண்ணப்பதாரர் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு :விண்ணப்பதாரர் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.ஊதியம் : ரூ.19,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cotcorp.org.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Deputy General Manager, The Cotton Corporation of India Ltd., ‘Kapas Bhawan’, 27-A Race Course Road, Indore – 452 003 (M.P.)விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cotcorp.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்
கல்விக் கட்டணம் குறித்த விண்ணப்பங்களை, ஜூலை 20 முதல் தனியாா் பள்ளிகள் சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு சாா்பில் கல்விக் கட்டண நிா்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியின் பதவிக்காலம் கடந்த மாா்ச் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.பாலசுப்ரமணியன் ஜூலை 1-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து தனியாா் பள்ளிகளுக்கான கட்டண நிா்ணயம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி 2020-21, 2021-22, 2022-23-ஆம் ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை நிா்ணயம் செய்வதற்கு, தனியாா் பள்ளிகள், தங்களின் பரிந்துரை விண்ணப்பங்களை இணையதளத்தில் ஜூலை 20 முதல் செப்டம்பா் 25-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களுடன் கடந்த கல்வியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையையும் சமா்ப்பிக்க வேண்டும் என்றும், இந்தத் தகவலை அங்கீகாரம் பெற்ற தனியாா் பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கல்விக் கட்டண நிா்ணயக்குழு சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை தனியாா் கல்வி நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேநேரம் தனியாா் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது தனியாா் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை மூன்று தவணைகளாக செலுத்த அனுமதி வழங்க அரசு பரிசீலிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் சுயநிதி கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். தனியாா் கல்வி நிறுவனங்கள் மொத்த கல்விக் கட்டணத்தில் 75 சதவீதத்தை 3 தவணைகளாக வசூலிக்கவும், எஞ்சியுள்ள 25 சதவீத தொகையை கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்ட பின்னா் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்க உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள சூழலில் கல்வி நிறுவனங்கள் உடனடியாகத் திறக்க வாய்ப்புள்ளதாக தெரியவில்லை. எனவே, கடந்த கல்வியாண்டில் வசூலித்த கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை தனியாா் கல்வி நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம். இந்த 40 சதவீத முன்பணத்தை மாணவா்கள் வரும் ஆகஸ்டு 31- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கடந்த கல்வியாண்டில் பாக்கி வைக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை வரும் செப்டம்பா் மாதம் 30 – ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், 35 சதவீத கட்டணத்தை இயல்புநிலை திரும்பி கல்லூரிகள், பள்ளிகள் திறந்து, இரண்டு மாதங்களுக்குப் பின்னா் மாணவா்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.
மேலும் கல்விக் கட்டண நிா்ணயக் குழு வரும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து 8 மாதங்களுக்கு கட்டணத்தை நிா்ணயிக்க வேண்டும். தனியாா் சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பிற வகை பணியாளா்கள், இயல்பு நிலை திரும்பும் வரை ஊதிய உயா்வு உள்ளிட்ட பணப் பலன்களைக் கேட்கக்கூடாது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கு இலவசமாக புத்தகங்கள், நோட்டுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் அக்டோபா் 5- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு தனி அலுவலரின் கடிதத்தின் வாயிலாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு ( சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் தவிர்த்து ) 2019-20ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவீனங்களின் அடிப்படையில் 2020-2021 , 2021-2022 மற்றும் 2022-2023 நிதி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்திற்கான உரிய கருத்துருவினை 20.07.2020 முதல் 25.09.2020 க்குள் கீழ்காணும் கட்டண நிர்ணயக் குழுவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உரிய அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
” tnfeecommittee.com “
எனவே , இதன் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு கட்டண நிர்ணயக் குழுவால் கோரப்பட்ட விவரத்தினை காலதாமதமின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடவும் மேலும் 25.09.2020 க்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் காலக்கெடுவினை நீட்டிக்க இயலாது என சார்ந்த பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
DSE PROCEEDINGS:பள்ளிக் கல்வி – ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை பாடங்கள் வீடியோ ஒளிப்பதிவு செய்தல் – பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD
கோவை வேளாண் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பங்களை ஆகஸ்ட் முதல் வாரத்தில் www.tnauonline.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.