Search

Flash News : 10,11 ஆம் வகுப்பு தேர்வு ரத்து - முதல்வரின் செய்திக்குறிப்பு ( Pdf )

Tuesday, 9 June 2020



10th,11th Exam Cancel - CM Press News ( pdf) - Download here

2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் 11 ஆம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டு போன [ வேதியியல் , கணக்கு பதிவியல் புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) , வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் , தொழிற்கல்வி - கணக்கு பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ] ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடத்த ஏற்கனவே அரசு ஆணை பிறப்பித்து , அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு , மாண்புமிகு உயர் நீதிமன்றம் இந்த தேர்வுகளை தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் , தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்தது . தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும் , சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது . நோய் தொற்று வல்லுநர்கள் , நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர் . எனவே பெற்றோர்களின் கோரிக்கையையும் , நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு , மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க , வருகின்ற 15 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும் , 11 ஆம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

எனவே , இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது . மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்களும் வழங்கப்படும் . 12 ஆம் வகுப்புத் தேர்வைப் பொறுத்தவரையில் , ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப 12 ஆம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One