Search

பல்கலைக்கழகங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Thursday, 11 June 2020

தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியீடு தமிழக அரசு கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து பின்னடைவு  

சென்னை ஐஐடி இந்த ஆண்டும் முதலிடம் பிடித்தது தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறு வனங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. 

இதற் காக தேசிய நிறுவன தரவரிசை கட்ட மைப்பு (என்ஐஆர்எப்) என்ற அமைப்பு உரு வாக்கப்பட்டது. மாணவர் தேர்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங் களை கொண்டு தரவரிசை உருவாக்கப்படும். 

அதன்படி, 2020-ம் ஆண்டுக்காக உயர் கல்வி தரவரிசை போட்டிக்காக தமிழகத்தில் இருந்து 260 உட்பட நாடு முழுவதும் 1,667 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இந் நிலையில், தரவரிசை பட்டியலை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று வெளியிட்டார். 

அதில் ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகமும், டெல்லி ஐஐடி மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. 2019-ம் ஆண்டுக்கான தரவரி சையிலும் சென்னை ஐஐடிதான் முதலிடத் தில் இருந்தது. 2018-ல் 10-வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலை. 2019-ல் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

இந்நிலையில், மீண்டும் பின்தங்கி தற்போது 20-வது இடத்தில் உள்ளது. பல்கலைக்கழக தர வரிசையில் 7-வது இடத்தில் இருந்து 12-வது இடத்துக்கும், பொறியியல் கல்லூரிக்கான தரவரிசையில் 9-ல் இருந்து 14-ம் இடத்துக் கும் அண்ணா பல்கலை. தள்ளப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங் களில் பாரதியார் பல்கலைக்கழகம் 21-வது இடத்திலேயே உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் 33-வது இடத்தில் இருந்து 41-வது இடத்துக்கும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 47-ல் இருந்து 64-க்கும், மதுரை காமராஜர் பல்கலை. 69-ல் இருந்து 84-க்கும் சரிந்துள்ளன. திருச்சி பாரதிதாசன்i 86-ல் இருந்து 77-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது. இதுதவிர முதல் 100 இடங்களில், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (13), திருச்சி என்ஐடி (24) வேலூர் விஐடி (28) உள்ளிட்ட 18 நிறுவனங்கள் உள்ளன.கல்லூரிகளுக்கான தரவரிசையில் மாநிலக் கல்லூரி 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு இறங்கியுள்ளது. அடுத்த படியாக லயோலா கல்லூரி (6), கோவை அரசு கலைக் கல்லூரிi(34) உள்ளிட்ட 32 கல்லூரிகள் 100 இடத்துக்குள் உள்ளன. மருத்துவ கல்லூரிக்கான தரவரிசையில் மெட்ராஸ் மருத்துவ கல்லூரி 12-வது இடம் என முதல் 40 இடங்களில் 7 தனியார் கல் லூரிகள் இடம்பெற்றுள்ளன. 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையிலேயே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One