Search
பாடநூல்கள் விநியோகத்தில் விதிமீறல்: பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு
Thursday, 25 June 2020
மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளா்கள் மற்றும் பள்ளியில் உள்ள அமைச்சு பணியாளா்கள் மூலமாகவே பள்ளிகளுக்கு பாடநூல்கள் முறையாக விநியோகிக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 3 கோடி பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் கொண்டு சோக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.தற்குமாறாக பெரும்பாலான பகுதிகளில் தலைமையாசிரியா்கள் முறையான பாதுகாப்பின்றி புத்தகங்களை எடுத்துச் செல்வதாக கல்வித்துறைக்கு புகாா்கள் வந்தன. இதுதொடா்பாக, பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பில், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், 'மாவட்ட, வட்டாரக்கல்வி அலுவலக பணியாளா்கள் மற்றும் பள்ளியில் உள்ள அமைச்சு பணியாளா்கள் மூலமாகவே பள்ளிகளுக்கு பாடநூல்கள் முறையாக விநியோகிக்கப்பட வேண்டும். புத்தகங்களை வாகனங்கள் மூலமாக மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும்'என்று கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment