எனவே நீண்டா நாட்களாக ஆசிரியர்களிடம் இருந்தும், பாடத்திட்டத்தில் இருந்தும் விலகி நிற்கும் மாணவ - மாணவிகளுக்கு தேர்வு பயத்தை போக்கி, அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார்படுத்த வேண்டியது மிக அவசியமாகும்.எனவே மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் 'சிறப்பு வகுப்புகள்' நடத்த அரசு உடன் அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Search
சிறப்பு வகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு கோரிக்கை
Monday, 8 June 2020
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி களில் 'சிறப்பு வகுப்பு' நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் துளசி விடுத்துள்ள அறிக்கை:கொரோனா ஊரடங்கினால், கடந்த மார்ச் 19ம் தேதி முதல் 80 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராக இருந்த மாணவர்கள் 80 நாட்களாக பாட புத்தகத்தை படிக்கும் மனநிலையில் இல்லை.இந்நிலையில் வரும் 15ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உளளது.ஏற்கெனவே இருந்த தேர்வு மையங்களை மாற்றி, மாணவர் கள் படித்த பள்ளிகளையே தேர்வு மையங்களாக மாற் றப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வாக, 'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு' அமைகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment