Search

தேர்வு மையங்களில் தூய்மை பணி தீவிரம்: தூய்மைப்படுத்தும் பணி துவக்கம்

Sunday, 7 June 2020


உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்கள் துாய்மைப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள், ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் வந்து செல்வதற்கும், துாய்மையான சூழலில் தேர்வு எழுதுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.


பத்தாம்  வகுப்புகள் செயல்படும் அனைத்து, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் முழுவதையும் தேர்வுக்கு தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. தேர்வு நடக்கும் மையங்களில், மாணவர் எண்ணிக்கைக்கு போதுமான அளவு தேர்வறைகள் இருப்பதும், தேர்வுக்கு வரும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்குவதற்கான விடுதிகள் துாய்மையாக இருப்பதையும், மாணவர்கள் ஜூன் 11ம் தேதியில் விடுதிக்கு வந்திருப்பதையும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை, உடுமலை கல்வி மாவட்டத்தில் துவங்கியுள்ளனர்.அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உட்பட அனைத்து மையங்களிலும், சுகாதாரப்பணிகள் துவங்கியுள்ளன.தேர்வறைகளில் முதற்கட்டமாக கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறது. தேர்வுக்கு முன்பும், தொடர்ந்து தேர்வு நாட்களிலும், கிருமி நாசினிகள் தெளிக்க ஏற்பாடு செய்வதற்கும் தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.தொடர்ந்து, விடைத்தாள்கள், ஒவ்வொரு தேர்வறைகளுக்கும் தனிதனியாக பிரித்து வைப்பது, அவற்றை தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகளையும் அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் துவங்கியுள்ளனர்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One