Search

பள்ளி மேலாண்மை குழுக்கள் சுய அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க கோரிக்கை

Tuesday, 16 June 2020


சமக்ர சிக்‌ஷா திட்ட நிதியை பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பயன்படுத்த முடியாமல் கல்வி அதிகாரிகளே குறுக்கீடு செய்வதாக மாணவர்கள் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

 தமிழகத்தில் பள்ளி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள், அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி(சமக்ர சிக்‌ஷா) திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை பள்ளிகளில் தேவைக்கேற்ப எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை இந்தக் குழு முடிவு எடுக்கும். பள்ளிக்கு அளிக்கப்படும் இத்தகைய ஒருங்கிணைந்த கல்வி நிதிகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர், பொருளாளர் பெயரில் வங்கியில் கூட்டுக் கணக்காக பராமரிக்க வேண்டும். பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்குவது, நாப்கின் எரியூட்டிகள்(ரூ.32000) வாங்க, ஆங்கில ெமாழிப் பயிற்சி நூல்கள் வாங்க நிதி அந்த நிதி ஒதுக்கப்படுகிறது.


 இந்த நிதியை பள்ளி மேலாண்மை குழுவில் உள்ளவர்கள் நேரடியாக வாங்க முடியாது. ஆனால் குழுக்களே வாங்கியதாக தீர்மானம் போட்டு, தேதி  குறிப்பிடாத காசோலை ஒன்றை நாங்கள் குறிப்பிடும் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.

பள்ளி மேலாண்மைக் குழுவை அமைத்துவிட்டு அதன் அதிகாரங்களை பள்ளிக் கல்வித்துறை கையில் எடுத்துக் கொண்டு மேலே இருந்து பொருட்களை வாங்குபவர்கள் யார் அவர்களுக்கு அதிகாரத்தை யார் கொடுத்தது, அதற்கான பேரங்கள் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. ஆனால் மேலாண்மைக் குழுக்கள் ரப்பர் ஸ்டாம்புகள் போல செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One