Search

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பள்ளி வழி மாணவர்கள், தனித்தேர்வர்கள் இருதரப்புக்கும் சமநீதி வழங்க கோரிக்கை

Friday, 19 June 2020

பத்தாம் வகுப்பில்
தேர்ச்சி பெற்ற,
பள்ளி வழி மாணவர்கள்,
தனித்தேர்வர்கள்
இருதரப்புக்கும் சமநீதி
வழங்க வேண்டும்.!

----------------------------------------
பொதுத் தேர்வை ரத்து
செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு எடுத்து முடிவு அனைவரின் வரவேற்பை பெற்றது.

இதற்காக போடப்பட்ட அரசாணை , காலாண்டு, அரையாண்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் மற்றும் வருகை பதிவிற்காக 20% மதிப்பெண் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்தது.

பொதுத் தேர்விற்கு பள்ளி மூலம் விண்ணப்பித்த( Regular Candidates) மற்றும் தனித் தேர்வராக விண்ணப்பித்த( Private Candidates) என்ற இரண்டு வகை மாணவர்களுக்கும் தேர்வு இரத்து, அனைவரும் தேர்ச்சி என்ற முடிவு பொருந்தும்.
அது தான் சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படை.


 ஆனால், அரசு வருகை பதிவு, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்கினால் தனித் தேர்வருக்கு அது பொருந்தாது. அவர்களை பாகு படுத்தும்.

அது மட்டுமல்லாமல், பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர் பொதுவாக  காலாண்டை விட அரையாண்டிலும் அதை விட பொதுத் தேர்தலிலும் சிறப்பாக தன் கற்றல் திறனை வெளிப்படுத்துவர். அப்படி இருக்கும் போது,
 காலாண்டில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்குவது எப்படி நியாயமாகும்.?

   மேலும்,  வருகை பதிவிற்கான மதிப்பெண் அனைவருக்கும் நியாயம் வழங்காது. நியாயமான மருத்துவ காரணங்களுக்காக  வராமல் இருந்த மாணவர்களை
கடுமையாக பாதிக்கும்.

எனவே, சிக்கலை பெரிதாக்காமல், தேர்ச்சி என்ற அறிவிப்போடு மட்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும்.

 பிளஸ் ஒன் பாடப் பிரிவு தேர்ந்தெடுக்க, இட ஒதுக்கீடு, மாணவர் விருப்பம், அதே பள்ளியில் பயின்றவர், பள்ளி அருகில் உள்ள வசிப்பவர் உள்ளிட்ட பல அளவுகோல் கொண்டு தலைமை ஆசிரியர் முடிவு செய்யலாம்.


 பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் சம நீதி  கிடைக்கும் வகையில், அரசாணை எண் 54-ல் உரிய திருத்தம் கோரி கல்வியாளர்கள் பலரும் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

கல்வியாளர்களின் இந்த
நியாயமான கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்.

      ம. வி. ராஜதுரை
 மூத்த பத்திரிகையாளர்,
 19.06.2020

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One