Search

பாடத்திட்ட குறைப்பு தொடர்பான கருத்துகளை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தெரிவிக்கலாம் மத்திய அமைச்சர் தகவல்

Friday, 12 June 2020


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் மாத இறுதியில் பள்ளிகளை திறக்கவும், புதிய கல்வி ஆண்டு தாமதத்தை சரிக்கட்ட பாடத்திட்டத்தை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்ரமேஷ் பொக்கிரியால் தனது ட்விட்டர் பக்கத் தில் வெளியிட்ட பதிவில், “தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டும், பெற்றோர், ஆசிரியர்கள் வைத்த கோரிக் கைகள் அடிப்படையிலும் புதிய கல்வி ஆண்டில் பாடத்திட்டங்கள் மற்றும் பாடவேளை நேரங்களை குறைக்க அரசு பரிசீலனை செய்துவருகிறது.

ட்விட்டர், பேஸ்புக்கில் பதிவிடலாம்

எனவே, இதுகுறித்த தங்களின் கருத்துகளை ஆசிரியர்கள், கல்வியா ளர்கள் எனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் வலைதளங்களில் பதிவிடலாம். அவை பரிசீலனை செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One