Search

அறிவியல் உண்மை - மழை பெய்யும்போது விமானம் பறக்கையில், இடி - மின்னல் ஆகியவற்றால் பாதிக்கப்படுமா?

Thursday, 18 June 2020

பாதிக்கப்படும்! மின்னேற்றம் பெற்ற மேகங்களுக்கிடையே அல்லது மேகத்திலிருந்து தரைக்கோ மின்னோட்டம் பாயும்போது காற்றின் மூலக்கூறுகள் அயனிகள் ஆவதால் மின்னல் என்ற வெளிச்சமும் இடி என்ற ஓசையும் உண்டாகின்றன.

இந்த மின்னோட்டமானது கட்டிடங்களில் இறங்கி, அவற்றைச் சேதப்படுத்தாமலிருக்க, இடிதாங்கிகள் பொருத்தப்படுகின்றன.

இவற்றின் வழியாக மின்சாரம், தரைக்கு இறங்கிவிடும். இந்த மின்னோட்டம், பறக்கும் விமானத்திலும் இறங்குவதற்கு வாய்ப்பு உண்டு. இவ்வாறு இறங்கும் மின்னோட்டத்தால், விமானம் பாதிக்கப்படும்; மின்கருவிகள் (Instruments) செயலிழக்கும். அதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கும். இதைத் தவிர்க்கும் பொருட்டு; மின்னேற்றம் கொண்ட மேகங்களிலிருந்து விலகி, விமானத்தை ஒட்டிச் செல்லும்படி உச்சரிக்கப்படுகின்றன.

இடி-மின்னல் பாதிக்கப்படாதவாறு , விமானத்திலும் இடிதாங்கி உண்டு

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One