சென்னையில் கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
சென்னையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரம் ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஆசிரியர்கள் நேரடியாக கொரோனா பாதித்த இடங்களுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்தி, தகவல்களை பதிய வேண்டும் என்றும் இந்த பணியில் ஈடுபடுவோர் ஸ்ட்ரீட் வாரியர் என அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் தங்களை கட்டாயப்படுத்தி கொரோனா களப்பணியில் ஈடுபட வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
களப்பணியின் போது கொரோனா பாதித்தவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினால் போதும் என்ற நிலையில், இந்த பணியை வீட்டில் இருந்தே செய்ய முடியும் என்றும் இதனை மாநகராட்சி நிர்வாகம் ஏற்க மறுப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment