மண்டல ரீதியிலான போக்குவரத்தும் நாளை முதல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னையைத் தாண்டி மாவட்ட அளவிலும் கொரோனா தொற்று பரவுவதால் அடுத்து என்ன நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் ஆரம்பித்தவுடன் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தொடர்ந்து 5 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய ஊரடங்கு வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் ஆலோசனைக்கு பின்பு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி "நாளை முதல் 30 ஆம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களின் எல்லையும் நாளை முதல் 30 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. இந்நாட்களில் அனைத்தவிதமான போக்குவரத்தும் ரத்துச் செய்யப்படுகிறது. மாவட்டத்தை விட்டு மாவட்டம் சென்றால் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயம்" என தெரிவித்துள்ளார்.
Search
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment