அரூரில் திருமணத்தில் பங்கேற்ற தலைமையாசிரியை உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க.,நகரைச் சேர்ந்தவர் 53 வயது தலைமையாசிரியை. இவர் சென்னையிலிருந்து வந்து கடந்த, 10-ம் தேதி, கிருஷ்ணகிரியில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்தில், சென்னையில் இருந்து, தலைமையாசிரியரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தலைமையாசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு, மூன்று நாட்களுக்கு முன், உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இருவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள், தருமபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம், திருமணம் மற்றும் விருந்தில் பங்கேற்ற குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட, 15 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தலைமையாசிரியையின் உறவினர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திரு.வி.க., நகர் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அரூர் பகுதியில் கடந்த, மூன்று மாதங்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில், இரண்டு நாட்களில், தலைமையாசிரியை உள்பட 10 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், திருமணத்தில் பங்கேற்றவர்கள் மூலம், பலருக்கும் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் நடமாடும் வாகனம் மூலம் மாதிரிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து 3 மாதமாக தொற்று இல்லாத அரூரில் இவர்கள் மூலம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
Search
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment