Search

கொரோனாவால் கல்வியில் 6 மாத பின்னடைவு இருக்கும் - பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்!

Tuesday, 16 June 2020



மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தேசிய தர வரிசை பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகின்றது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உயர்கல்வி பட்டியலில் கடந்த ஆண்டு பெற்று இருந்த  21-வது இடத்தினை இந்த ஆண்டும் தக்க வைத்துள்ளது. இதுதொடர்பாக இன்று நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.காளிராஜ் பிரத்யேக பேட்டியளித்தார்.

அப்போது அவர், ‘உயர்கல்வி துறையில் 21 வது இடத்தை தக்கவைத்து  இருந்தாலும், அகில இந்திய அளவில் பல்கலைக்கழக அளவில் 14 வது இடத்தில் இருந்து  13 வது இடத்திற்கு பாரதியார் பல்கலைக்கழகம் முன்னேறியுள்ளது என தெரிவித்தார். இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கூட்டு முயற்சியும் சரியான ஒருங்கிணைப்புமே காரணம் என்று தெரிவித்தார்.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு நடத்துவது குறித்து இதுவரை தமிழக அரசிடம் இருந்து தகவல் எதுவும் வரவில்லை என தெரிவித்த அவர், கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்வியில் 6 மாதம் பின்னடைவு இருக்கும் என தெரிவித்தார். இந்த நேரத்தில் மாணவர்களுக்கு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவ வேண்டிய நேரம் எனவும் துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One