Search

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புநடத்த தடை விதிக்க வழக்கு!

Tuesday, 23 June 2020


கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்துபள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால்கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை.

பள்ளிகள் எப்போது திறக்கம் என தெரியாததால் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை 2 மணி நேரத்திற்கு மேல் நடத்த தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விமல் மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

6 மணி நேரத்திற்கு மேல் மாணவர்கள் கைபேசி பார்ப்பதால் ரெடினா பாதிக்கப்படும் என கண் மருத்துவர்கள் கருத்து தெரிவிப்பதாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கண் மருத்துவமனை டீனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஜூன் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One