Search

ஆசிரியர்கள் பொதுத்தேர்வு தொடர் பணிக்காக 08.06.2020 முதல் பள்ளிக்கு வருகைபுரிய CEO உத்தரவு.

Saturday, 6 June 2020


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 2020 -இல் நடைபெற உள்ள மேல்நிலை மற்றும் இடைநிலைப் பொதுத்தேர்வுகள் குறித்து அறிவுரைகள் :

கீழ்க்காணும் அறிவுரைகள் அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுட்டப்படுகிறது.

* மாணாக்கரின் விடைத்தாளில் தேர்வு முடிந்த பின்னர் இடப்படும் அரசுத் தேர்வுகள் முத்திரையை அறைகளின் எண்ணிக்கைக்கு எற்ப தேர்வு மையங்களில் இருந்து மாதிரி முத்திரையை பெற்று 12.06.2020 -க்குள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* பள்ளிகளில் பயிலும் அனைத்து பொதுத்தேர்வு எழுத உள்ள மாணாக்கர்களுக்கும் தேர்வு நுழைவு சீட்டினை வழங்கும் போது ( 08.06.2020 முதல் ) நழைவு சீட்டுடன் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பெற்றுள்ள 2 முகக்கவசங்கள் ஒவ்வொரு மாணாக்கர்களுக்கும் வழங்க வேண்டும். 3 - வது முகக்கசம் 19.06.2020 அன்று வழங்கவும் தெரிவிக்கப்படுகிறது.

* பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பட்டதாரி ஆசிரியர் , இடைநிலை ஆசிரியர் , சிறப்பு நிலை ஆசிரியர்கள் 08.06.2020 முதல் பள்ளிக்கு வருகைபுரிய தெரிவிக்கவும் சார்ந்த ஆசிரியர்கள் வருகை விவரங்களை இவ்விணையதளத்தில் கீழ்க்காணும் வலைதள இணைப்பை பயன்படுத்தி 06.06.2020 அன்று காலை 10.00 மணிக்குள் வருகையினை பதிவு செய்ய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மொத்த மாணவர்களின் எண்ணிக்கையும் 08.06.20120 அன்று நுழைவுச்சீட்டிளை பெற்றுச் சென்ற மாணவர்கள் எண்ணிக்கையினையும் வலைதளத்தில் பதிவு செய்யத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , இத்துடன் தேர்வுகள் நடத்துவது சார்ந்து வழங்கப்பட்ட அறிவுரைகள் மீளவும் , பள்ளிகளுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டும் அனைத்து ஆசிரியர்கள் அறிந்துக்கொள்ளவும் அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One