Search

ஊரடங்கிற்கு பிறகான கல்வி சூழல் குறித்து ஆராய வல்லுநர்கள் குழு!

Saturday, 30 May 2020

கற்றல் -கற்பித்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து ஆராய, அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில் கூடுதலாக 4 உறுப்பினர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 17 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை எப்போது தொடங்குவது? சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாமா? பாடத்திட்டங்களை குறைக்கலாமா? வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சி.ஜி.தாம்சன் வைத்யன் தலைமையில் 12 பேர் கொண்ட வல்லுநர் குழுவை பள்ளிக் கல்வித்துறை அமைத்தது.

 
இந்நிலையில் இந்த குழுவில் மேலும் 4 உறுப்பினர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அறிக்கை தாக்கல் செய்ய வல்லுநர் குழுவுக்கு ஏற்கனவே 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Read More »

தமிழக அரசுப் பள்ளிகளில் 10% மாணவர்கள் அதிகரிக்கலாம்!


கரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் வேலை முடக்கத்தால் அனைத்துத் தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சிலருக்கோ மாதச் சம்பளத்தில் பிடித்தம், சிலருக்கோ வருமான இழப்பு, சிலருக்கோ வேலையிழப்பு, பலருக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. இது குழந்தைகளின் கல்வியில் உடனடியாக எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இதுவரை அதிகம் செலவழித்து தனியார் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைப் படிக்க வைத்த நடுத்தர குடும்பத்துப் பெற்றோர் பலர் அரசுப் பள்ளிகளைத் தேடி வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் மொத்தம் 45 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வகுப்பு வரையில் 67 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் கூடுதலாக 10 சதவீதம் வரை மாணவ சேர்க்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

மாணவர் சேர்க்கையை தற்போது நடத்தக்கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளை நாடி வரும் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும்படி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர் கழகத் தலைவர்கள் சிலருடன் உரையாடினோம்.

தகுதியான ஆசிரியரும் ஆங்கில வழிக் கல்வியும்!

"ஊரடங்கு காலகட்டத்தில் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு வலியுறுத்தி இருந்தாலும் பல தனியார் பள்ளிகள் பெற்றோரைத் துரத்தித் துரத்தி கட்டண வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தொல்லை தாங்க முடியாமல் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைச் சேர்க்கும் யோசனைக்கு வந்திருக்கிறார்கள். நிச்சயமாக பொதுக் கல்வி முறைதான் நன்மை பயக்கும். அதை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முழு தகுதி வாய்ந்தவர்கள் என்பதை பொதுமக்கள் கவனத்துக்கு இத்தருணத்தில் கொண்டு வர விரும்புகிறோம். அதேபோல அரசுப் பள்ளிகள் அனைத்தும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆங்கில வழிக் கல்வியை கற்பித்து வருகின்றன. இந்த நேரத்தில் அரசிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். தமிழகத்தில் கிட்டத்தட்ட 2000 ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. தற்போது கூடுதலாக மாணவர்கள் சேரும் சூழல் கனிந்திருப்பதால் இந்தப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியரேனும் நியமிக்கப்பட வேண்டும்" என்கிறார் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ்.

பலப்படுத்த வேண்டிய நேரம்

"அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் வருவது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம். அதே நேரத்தில் இந்தத் தருணத்தில் நம்முடைய பள்ளிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சராசரியாக அரசுப் பள்ளி வகுப்பறைகள் 440 சதுர அடி கொண்டவை. மாணவர் ஒருவருக்கு 10 சதுர அடி என்று வைத்துக் கொண்டால் 40 மாணவர்களுக்கு 400 சதுர அடி அவசியமாகிறது. மீதமுள்ள 40 சதுர அடி ஆசிரியருக்கானது. அப்படி இருக்கையில் ஏற்கெனவே பெருவாரியான அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பு 60 முதல் 80 மாணவர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படும் பட்சத்தில் முதலில் அதிக எண்ணிக்கையிலான வகுப்பறைகள் தேவைப்படும். இதேபோன்று கூடுதல் எண்ணிக்கையில் மேஜை, இருக்கை, காற்றோட்டமான இடம், தூய்மையான கழிப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விசாலமான விளையாட்டுத் திடல், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பலவற்றை ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கிறது.

ஏற்கெனவே 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில்தான் சராசரியாக இடைநிலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளை விடுத்து அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைச் சேர்க்க வரும் பெற்றோர் இந்த விகிதாசரத்தையும் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடவே செய்வார்கள். அதுமட்டுமின்றி பாட ஆசிரியர்கள் சிறப்பாக கற்பித்தாலும் குழந்தைகளின் தனித்திறன்களை வளர்க்கும் சூழலும் இன்றைக்கு அத்தியாவசியமாகி இருக்கிறது.

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் 1 முதல் 5 வகுப்புவரை ஒரே ஆசிரியரே அத்தனை பாடங்களையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கையில் இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட தனித்திறன்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் முழு நேரமாக நியமிக்கப்பட வேண்டும். அதன் மூலமாக புதிய மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். மேலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி அழைத்து வர முடியும்" என்கிறார் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலச் செயலாளர் பிச்சைக்கனி.

கரோனா காலத்தில்தான் என்றில்லை சாதாரண காலத்தில்கூட தனியார் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைப் படிக்க வைக்க நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும் கடன் மூட்டையைச் சுமக்க நேர்கிறது. ஸ்மார்ட் வகுப்பறை முதற்கொண்டு பல வசதிகள் அரசுப் பள்ளிக்கூடங்களிலும் இன்று நடைமுறையில் உள்ளன. மாநிலப் பாடத்திட்டத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே ஏழ்மையின் காரணத்தினால் மட்டுமல்ல தரமான கல்வி வேண்டியும் அதிக எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் விரைந்து வரும் நாட்கள் தூரத்தில் இல்லை என்ற கருத்தையும் கல்வியாளர்கள் பலர் முன்வைக்கிறார்கள்.
Read More »

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் வேலைவாய்ப்புச் செய்திகள்!

TEACHERS WANTED

☘️ENGLISH
☘️PHYSICS
☘️CHEMISTRY
☘️BOTANY
☘️ZOOLOGY
☘️SOCIAL SCIENCE

LAST DATE: 03/06/2020
MOUNT ZION
MATRIC SCHOOL
PUDUKOTTAI.

* உணவு , தங்குமிடம் இலவசம் .

* To Handle 6th and 10th Classes .
( With or Without B.Ed )
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை mzhss@mountzionschools.com TOOTM மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .

மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 7373781816 , 7373781817 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
LECTURER

🎯English
🎯Maths
🎯Physics
🎯Chemistry

PSV Polytechnic
Thirumayam
Pudukkottai.

Civil Mechanical , ECE , EEE வகுப்புகள் எடுக்க தேவை .

Hostel வசதி உண்டு .

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை psvpolytechnic@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் . மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 7373777657 , 9524577657 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .
Read More »

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவு: மத்திய அரசு


பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை(மே 31) முதல் 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 5வது கட்டமாகஜூன் இறுதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துமத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் கல்வி நிறுவனங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாவது:

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசித்து கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆலோசிக்கலாம். இதன் மூலம் பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், கல்வி நிறுவங்களை திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவுஎடுக்கப்படும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நடைமுறைகளை, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் உள்துறை அமைச்சகம் ஆலோசித்து அதற்கான நடைமுறைகளை தயாரிக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

மண்டலத்திற்குள் செல்ல இ-பாஸ் தேவை இல்லை - தமிழக அரசு. ( Lockdown 5.0 Full details )

தமிழகத்தில் 8 மண்டலத்திற்குள் செல்ல இ-பாஸ் தேவை இல்லை - தமிழக அரசு.

* தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு; மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை.

* ஜூன் 30வரை பள்ளி,  கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை.

பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில் , குறிப்பாக 29.5.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில் , மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும் , ஊரடங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ள பரிந்துரை செய்ய , 26.5.2020 அன்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையிலும் , 26.5.2020 மற்றும் 30.5.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் , மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து , கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும் , மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும் , தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் , கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது .


Lockdown Relaxation - Tamilnadu Gov Details 31.05.2020 - Download here...

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,  பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.5.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ள பரிந்துரை செய்து, 26.5.2020 அன்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையிலும், 26.5.2020 மற்றும் 30.5.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும்,


  மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீடிநகண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செடீநுயப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீடிநகாணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-

* வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
* நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிறவிருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

* வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.
* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
*  மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் , பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு,கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

* மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள்
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
* திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

இ-பாஸ் முறை :

* அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.

* வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.


பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய்  கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செடீநுயும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கவேண்டும்.

* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.

* எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
*  டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

* மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள்  இன்றி பயன்படுத்தலாம்.

* ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.
* முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப்பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது
Read More »

கல்லூரிகள் திறப்பு, செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை ஜூன் 1-ம் தேதி ஆலோசனை.

1590823230200

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பது, செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை.
Read More »

G.O 79 - கற்றல் கற்பித்தலில் கொரானா பாதிப்பு நிபுணர் குழுவில் மேலும் புது உறுப்பினர்கள் சேர்ப்பு - அரசாணை வெளியீடு

Read More »

TRB - திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம்


திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு தேதி , காலியிடங்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ஆனால் ஊரடங்கால் அட்டவணைப்படி தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரியிடம் கேட்டபோது , “ திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன ” என்றார். நிதி நெருக்கடியால் தமிழக அரசு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் , காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமா ? அல்லது அறிவிக்கப்பட்ட அனைத்து காலியிடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுமா ? என்பது அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும்.
Read More »

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்: செங்கோட்டையன்


தற்போது 12ஆம் வகுப்புக்கான தேர்வுத்தாள் திருத்தும் பணியானது நடந்து வருகிறது.ஜூன் 15-ம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ளது. இந்த இரண்டு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Read More »

பத்தாம் வகுப்பு ஹால்டிக்கட் எப்போது கிடைக்கும்?

பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் - தேர்வுத்துறை உத்தரவு ! 10 ம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கெட்டை தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவர்களிடம் வழங்க வேண்டும் ; கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க உத்தரவு !
Read More »

2020-21 கல்வியாண்டில் 100 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்!



இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பள்ளிகள் குறைந்தது 3 மாதங்கள் தாமதத்திற்குப் பிறகே திறக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு மூன்று மாதங்கள் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் படி மேல்நிலைப் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்திலும்,1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செப்டம்பரில் மாதத்திலும் திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக பள்ளிகள் ஆண்டுக்கு 220 நாட்கள் செயல்படும். கொரோனாப் பரவல் காரணமாக 2020 -2021 கல்வியாண்டில் பணிநாட்கள் 100 நாட்களாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டுத் துறையிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன.
இதுவரை நடத்தப்பட்டிருக்கும் ஆலோசனைகளின் படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரைப் பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது.

6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் 4 நாட்களும், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வரையிலும் வகுப்புகள் நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமிருக்கும் நாட்கள் மாணவர்களை வீட்டிலிருந்தே படிக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும். மேலும் பாடத்திட்டங்களையும் குறைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது
Read More »

EMIS - Udise+ HM Declaration எளிய முறையில் செய்வது எப்படி? - Video

Friday, 29 May 2020


Read More »

பள்ளி பாடங்களை குறைக்கலாமா? ஆலோசனையில் ஆய்வுக்குழு

பள்ளி கல்வியில், பாடங்களை குறைக்கலாமா அல்லது பாடத்திட்டத்தையே குறைக்கலாமா என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டில், வரும், 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லாததால், 'ஆன்லைனில்' வகுப்புகளை நடத்துவதற்கு, பள்ளிகள் முடிவு செய்துள்ளன.இந்நிலையில், இந்த கல்வி ஆண்டு பணிகள் காலதாமதமாவதால், மாணவர்களுக்கு கல்வி சுமையை குறைக்கும் வகையில், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில், பல்வேறு பிரிவு இயக்குனர்கள், குழுவில் இடம் பெற்றுள்ளனர்.இந்நிலையில், ஆய்வுக் குழுவினர், நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, பாடத்திட்டத்தை குறைப்பதா அல்லது பாடங்களை குறைப்பதா என, ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

குறித்த நேரத்தில் பள்ளிகளை திறந்து, பாடம்நடத்த முடியாததால், கல்வி முறையில், சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. முக்கியமாக, மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில், பாடச் சுமையை குறைக்க வேண்டும்.தமிழக அரசின், புதிய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் நடத்தினால், அரசு நிர்ணயிக்கும் காலத்தில், பருவத் தேர்வுகளை நடத்த முடியாமல் சிக்கல் ஏற்படும். எனவே, பாடங்களின் அளவை குறைக்கலாம் என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிலர் பாடத்திட்டத்தை குறைக்கலாம் என்கின்றனர். பாடத்திட்டத்தை குறைப்பது என்பது, அடிப்படை கல்வியில், சில அம்சங்களை தவிர்த்து பாடம் நடத்தி, அவர்களை அடுத்த நிலைக்கு அனுப்பவதாகும்.

பாடத்திட்டங்களின் சில அம்சங்களை விட்டு விட்டு, பாடம் நடத்தினால், சில அடிப்படை தகவல்களையும், அதற்கான கல்வியறிவையும் பெறாமல், மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு முன்னேறிச் செல்லும் நிலை ஏற்படும். அதனால், அடுத்த கல்வியாண்டில், அவர்கள் படிக்கும் பாடங்களுக்கு அடிப்படை தெரியாமல், பாடங்களை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்.எனவே, பாடத்திட்டத்தை குறைப்பதற்கு பதில், கூடுதல் பாடங்கள் இருந்தால், அவற்றை மட்டும் குறைத்துக் கொள்ளலாம் என்ற, கருத்து எழுந்துள்ளது.

இது தொடர்பாக, கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்டு, அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
Read More »

TEACHERS WANTED.

Wanted PGT / BT / TGT Teachers
FOR ALL SUBJECTS which includes PET, Yoga, Karate & Silambam Applications are invited from Experienced Teachers of renowned English Medium Schools.

Fluency in Spoken English is a prerequisite. The interested candidates with Qualification or expertise in the relevant flelds/subjects may submit their credentials in person to, THE PRINCIPAL on or before May -31, 2020.

Interview date will be intimated later. SACRED HEART MAT. HR. SEC. SCHOOL No.7, K.V.R NAGAR, NEYVELI-2
For Details: 63692 26336, 63827 78797, sacredheartschooljobs@gmail.com
Read More »

12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்: தேர்வுத்துறை அறிவிப்பு


12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 7,400 தேர்வு மையங்களில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்.

12ம் வகுப்பு தேர்வெழுதும் 36,089 மாணவர்கள் முந்தைய தேர்வு மையங்களில் எழுதலாம் எனவும் கூறியுள்ளது.
Read More »

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - வெற்றிக்கான வழிகாட்டி கையேடு.


வணக்கம் ,

வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் மாணவர்கள் தேர்வு பயம் , ஆர்வமின்மை , இந்த கொரோனா நோய் தொற்று பேரிடர் , போன்ற பிரச்சனைகளை கடந்து , ஊரடங்கில் எவ்வாறு கவனத்தோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு மனநலன் சார்ந்த பயனுள்ள கருத்துகளைக் கொண்ட இந்த கையேட்டை தன்னுடைய நேரத்தையும் , சிந்தனையையும் செலவு செய்து மாணவர்கள் நலம் கருதி , நமது தமிழ்நாடு உளவியல் சங்கத்தின் மூலம் வெளியிடும் பேராசிரியர் கு.சின்னப்பன் , பதிவாளர் ( பொ ) , தமிழ்ப் பல்கலைக்கழகம் , தஞ்சாவூர் அவர்களுக்கும் மற்றும் அவர் தலைமையிலான ஆசிரியர்கள் குழுவிற்கும் தமிழ்நாடு உளவியல் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


SSLC Public Exam - Special Winning Guide - Download here...
Read More »

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.57,53,67,000 மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கட்டிடங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன கட்டிடங்கள் திறப்பு குறித்து செய்தி வெளியீடு

Read More »

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு விருது வழங்கி அமைச்சர் திரு செங்கோட்டையன், மாநிலத் திட்ட இயக்குனர் பாராட்டு

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்திய தோடு கடந்த சில ஆண்டுகளாக நவீனத் தொழில் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெருமளவில் பயன்படும் வகையில் சில செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.


அதில் மிக முக்கியமானது தமிழ்நாடு ஆசிரியர் முகமை மற்றும் தீக்‌ஷா எனப்படும் தொழில்நுட்பங்களாகும்.


இவை இரண்டின் மூலமும் ஆசிரியர்கள் தங்களுடைய திறமையை தொழில்நுட்ப ரீதியாக வளர்த்துக் கொள்ளவும், தேவையான பாடத் திட்டங்களை பெற்று தங்களுடைய கற்பித்தலை வளப்படுத்திக்கொள்ளவும்,
மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்வித் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக் கொள்ளவும் இது மிகுந்த அளவில் பயன்பட்டு வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் தீக்‌ஷா தொழில்நுட்பத்தை இந்திய அளவில்
அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய பயனாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செயல்பாடுகளை ஒருங்கிணைப்பு செய்வதிலும், மாநிலம் முழுக்க இருக்கின்ற திறமைவாய்ந்த தொழில்நுட்ப ஆசிரியர்களிடமிருந்து கற்றல் கற்பித்தல் வளங்களை பெற்று உள்ளீடு செய்வது வரையிலான கல்வி தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலைஆசிரியர் சதீஷ் என்பவரது பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது.





இவரது சீரிய பணியை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஆகியோரது முன்னிலையில் மாநிலத் திட்ட இயக்குனர் திரு சுடலைகண்ணன் ஐஏஎஸ் அவர்கள் *Certificate of Excellence* என்கிற விருதை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களது கரங்களால் வழங்கிப் பெருமைப் படுத்தினார்.

இதுகுறித்து ஆசிரியர் சதீஷிடம் கேட்டபொழுது,  இது  மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்த விருதாகக் கருதுகிறேன் எனச் சொல்லி மகிழ்ந்தார் 
Read More »

மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்புக்காப்பீடு செய்யுங்கள் தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

புதுக்கோட்டை,மே.29:10 ம் வகுப்புப் பொதுத்தேர்வை தள்ளிவையுங்கள்,தேர்வை தள்ளி வைக்காமல் தேர்வை நடத்தினால் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்புக்காப்பீடு செய்யுங்கள் என  தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஸ்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தினால் ஊரடங்கு அமல் செய்யப் பட்டுள்ள நிலையில், நமது இந்திய தேசத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம்,  மக்கள் பாதுகாப்பில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்த வந்த தமிழக அரசு தொடர்ந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த நேரத்தில் கோரிக்கையாக வைக்கின்றேன்.

பள்ளி மாணவர்கள் ,கல்லூரி மாணவர்கள் ஆகியோருடைய நலன்களைக் கருதி மக்கள் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்கின்ற அரசாங்கம், இன்னும் ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படாத சூழலில்,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் தொற்றுநோய் சூழ்ந்திருக்கும் , சமூகப்பரவலாக அதிகரித்துக்கொண்டிருக்கும் இக்கட்டான காலகட்டத்தில் நடத்த முன்வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.

மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்ற வேண்டிய அழுத்தம் இருப்பினும், மாணவர்களின் உயிர் பாதுகாப்பையும், மன நிலையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசே அழுத்தம் கொடுத்தாலும்,
ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது சாதாரண விஷயம் அல்ல. தோராயமாக 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைக்கொண்டு நடத்தப்பட வேண்டிய விசயமாகும்.  இயன்றவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தக்கூடிய முடிவினை கைவிட வேண்டும் என்பதே முதன்மையான கோரிக்கையாக இருந்தாலும் கூட,
அவசியம் நடத்தியே தீர வேண்டுமென அரசாங்கம் நினைத்தால் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து, ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் தேர்வை நடத்த திட்டமிடலாம். ஆனால் முதல் மூன்று வாரங்கள் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற வேண்டும். தனது ஆசிரியர்களை வகுப்பறையில் சந்திக்காமல் நேரடியாகத் தேர்வறையைச் சந்திக்கும் சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது.
உளவியல் ரீதியாக மாணவர்களிடம் பல்வேறு சிக்கல்களை இந்த கொரோனா ஏற்படுத்தி இருக்கும். அவற்றைக் களையாமல் தேர்வறைக்கு அனுப்புவதென்பது சரியான செயலாக இருக்காது.



ஆனால் அதேநேரத்தில் தேர்வு எழுதக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும்,
தேர்வுப்பணியில் ஈடுபடக் கூடிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தமிழக அரசு தாமாகவே முன்வந்து அரசு சிறப்பு மருத்துவக் காப்பீடு செய்வதுடன், தேர்வில் பங்கேற்ற பிறகு, மாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ அல்லது பணியாளர்களுக்கோ கொரோனா  தொற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 லட்ச ரூபாயை வழங்குவதுடன்,
உயிர்பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்கிற அரசு உத்தரவு அறிவித்துவிட்டு,
தேர்வை நடத்த திட்டமிடுவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும். இது மனரீதியாக அவர்களுக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும்.

எனவே இதுகுறித்து உரிய ஆலோசனை செய்து, தக்கமுடிவு எடுக்கும்படி தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
Read More »

Easy English ... Jolly English..Unit 1 Teaching of English by Phonetic Method




ஐயப்பன் என்ற தொடக்கப் பள்ளி தலைமையாசிரியரின் சீரிய உழைப்பாலும்,பயிற்சியாலும் உருவான தொகுப்பே இம்முறை.
திருப்போரூர் ஒன்றிய இடைநிலை ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்போடும்,அர்ப்பணிப்போடும் இம்முறை பாட அலகுகளாக்கப் பட்டது.



கண்ணன் மற்றும் ஞானசேகர் ஆசிரியர்கள் சூலேரிக்காட்டுக்குப்பம் என்ற கடற்கரை ஓரப் பள்ளியைத் தெரிவு செய்தார்கள்.
       அனைவரும் இணைந்து பல விதமாகத் திட்டமிட்டோம்.பலநாட்கள் இரவு பகல் பாராமல் வகுப்பறையை English Lab போல ஓவியங்களால் வடிவமைத்தோம்.


தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் இன்று காணப்படும் வகுப்பறை ஓவியங்களின் முன்னோடி இந்த வகுப்பறை தான்.

ஆசிரியர் கண்ணன் இதை சிறப்பாகச் செய்து முடித்தார்.மகாபலிபுரம் கடற்கரை அருகில் ஆங்கில படப்பதிவுக்காக உருவான  வகுப்பறையை நீங்கள் இதில் பார்க்கலாம்.script, Location, preparation போன்றவற்றை உருவாக்கவே 2 மாதங்கள் யாருமே தூங்கவில்லை.


தொடக்கக் கல்வித் துறையில் இணை இயக்குநராக இருந்த திருமதி. லதா அவர்கள் தான் இத்திட்டத்தின் ஆணிவேர்.படைப்பாளிக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தையும்,சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்தார்கள்.


எனது பக்கபலமான தொழில்நுட்பக் கலைஞர்களோடு களம் இறங்கினேன்.அந்தோணி,ஜான்  கேமரா.வின்சி அண்ணன் எல்லா வித உதவிகளும் செய்தார்.


ஒரு சினிமா எடுக்க என்னென்ன விஷயங்கள் தேவையோ அந்த தொழில்நுட்பத் தரத்தை மனதில் கொண்டு,குழந்தைகளுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்ற ஈடுபாட்டோடு ஒவ்வொரு நிமிடமும் உன்னிப்பாக இருந்தோம்.


அனுபவம் ஒவ்வொரு நாளும் தொடரும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே உதவி தான்.எப்படியெல்லாம் பகிர முடியுமோ எல்லோருக்கும் பகிருங்கள்.


இதில் பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய ஆசிரியர்களின் உழைப்பினாலும்,தியாகத்தினாலும் மட்டுமே இந்த வெற்றி சாத்தியம்.முதல் நன்றிகள் இவர்களுக்கும்,ஐயப்பன் மற்றும் அமலன் ஜெரோம் ஆசிரியர்க்கும்...


Phonetic method -இன் முதல் unit இது




இந்த முதல் அத்தியாயத்தை நீங்கள் பார்ப்பதற்காய் ஆறு மாதத்திற்கும் மேலான பலருடைய உழைப்பு பின்புலமாய் இருந்துள்ளது...


அப்படி ஆறு மாதமாய் என்னத்த திட்டமிட்டீர்கள் என்று கேட்பவர்களுக்காய்...

நிறையக் கேள்விகள் எங்களுக்குள்...
கேமரா வைக்குமளவுக்கு அறை நீளமாக வேண்டுமே,சுவற்றில் flex வைப்பதா அல்லது ஓவியம் வரைவதா?
Flex வைத்து reflect ஆனால் என்ன செய்ய? எனவே ஒரு இடம் விடாமல் ஓவியம் வரைய முடியுமா?


அவ்வளவு பெரிய அறைக்கு lightings எப்படி arrange பண்ணுவது?
எல்லா சன்னல்களையும்,கதவையும் அடைத்தால் தான் lightings சீராக இருக்கும். அப்படியென்றால் 10,000 வாட்ஸ் வெளிச்ச வெப்பத்தில் நடிக்கும் ஆசிரியர்கள் தாங்குவார்களா?
ஒவ்வொரு ஆசிரியர்களும் தினசரி அதிகாலை ஒவ்வொரு இடத்திலிருந்தும் பல கிலோ மீட்டர் பயணித்து வர வேண்டும், மாலை தான் படப்பிடிப்பு முடிந்து செல்ல வேண்டும், 4 மாதம் இப்படியே தொடர்ந்து வருவார்களா?
Script முழுக்க முழுக்க ஆங்கிலமா அல்லது
தமிழா அல்லது இரண்டும் கலந்துமா?
ஆசிரியர்களுக்கு எது புரியும்? குழந்தைகளுக்கு எது படிக்கப் பிடிக்கும்?
Screenplay ல் ஒரு தொய்வில்லாமல் dialogue எப்படி எழுதுவது?
நெல்லிக்குப்பம் ஊருக்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் 30 கிலோ மீட்டர். சின்ன இடையூறின்றி தினசரி குழந்தைகளை யார், எப்படிக் கூட்டி வருவது?


எல்லா ஆசிரியர்களையும் ஒரே மாதிரியான சேலை 2 எடுக்கச் சொல்லி,எடுத்து விட்டார்கள்? 4 மாதங்கள் ஒரே சேலை தினசரி உடுத்துதல் சாத்தியமாகுமா?
தரையில் உட்கார வைத்தா?chair போடுவதா?
தரையில் என்ன விரிக்க?விரிப்புக்கு என்ன செய்ய?
4 மாதங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் சாப்பாட்டுக்கு எப்படி ஏற்பாடு செய்வது?தொழில் நுட்ப கலைஞர்கள் தங்கி,சாப்பிட என்ன செய்வது?
தினசரி அனைத்தையும் காலை தயார் செய்ய வேண்டும்.மாலையில் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இதற்கு என்ன பண்ணுவது?
Live sound recording-ல் நாய் குலைத்தால் கூட Re-take எடுக்க வேண்டும். சாத்தியமாகுமா?

இப்படி சின்னச்சின்னக் கேள்விகள். கேள்விகள் சிறிதாயினும் நடைமுறையில் இது எவ்வளவு பிரச்சினை என்பதை அணு அணுவாய் அனுபவித்தோம்.

ஒரு நாளில் இது சுலபம். ஒவ்வொரு நாளும் எவ்வளவு கடினம் என்று தெரிந்தும் போராடினோம்.
விளைவு முதல் unit தற்போது நீங்கள் பார்க்கும்படியாக.
கொஞ்சம் தான் சொல்லியிருக்கிறேன்...
அனுபவம் தொடரும்...

இது ஆங்கில பயம் போக்கும் அட்சயம். பார்ப்போம்...ஆசிரியர்கள் இதை எவ்வளவு பயன்படுத்தப் போகிறார்கள்? எத்தனை பேருக்கு share செய்து மானுடம் பயனுற வாழ வைக்கப் போகிறார்கள் என்று.
நல்லபடி நடந்தால் அரசுப்பள்ளிகள் தப்பிக்கும்.ஆங்கில பயம் அகலும். Cbse க்கு நிகரான உச்சரிப்பு நிகழும்.அடுத்த ஆண்டு சேர்க்கை அதிகரிக்கும். கொஞ்சம் முன் வருவோம்...வெறும் 43 நாட்கள் மட்டுமே போதும்.இன்றிலிருந்து ஒரு முயற்சி... முனைவோம்.
Read More »

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு certificate of Excellence என்னும் விருது வழங்கி மாநிலத் திட்ட இயக்குனர் பாராட்டு


தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்திய தோடு கடந்த சில ஆண்டுகளாக
நவீனத் தொழில் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெருமளவில் பயன்படும் வகையில் சில செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.


அதில் மிக முக்கியமானது தமிழ்நாடு ஆசிரியர் முகமை மற்றும் தீக்‌ஷா எனப்படும் தொழில்நுட்பங்களாகும்.
இவை இரண்டின் மூலமும் ஆசிரியர்கள் தங்களுடைய திறமையை தொழில்நுட்ப ரீதியாக வளர்த்துக் கொள்ளவும், தேவையான பாடத் திட்டங்களை பெற்று தங்களுடைய கற்பித்தலை வளப்படுத்திக்கொள்ளவும்,
மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்வித் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக் கொள்ளவும் இது மிகுந்த அளவில் பயன்பட்டு வருகிறது.
இன்னும் சொல்லப்போனால் தீக்‌ஷா தொழில்நுட்பத்தை இந்திய அளவில்
அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய பயனாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இச்செயல்பாடுகளை ஒருங்கிணைப்பு செய்வதிலும், மாநிலம் முழுக்க இருக்கின்ற திறமைவாய்ந்த தொழில்நுட்ப ஆசிரியர்களிடமிருந்து கற்றல் கற்பித்தல் வளங்களை பெற்று உள்ளீடு செய்வது வரையிலான கல்வி தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலைஆசிரியர் சதீஷ் என்பவரது பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது.


இவரது சீரிய பணியை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஆகியோரது முன்னிலையில் மாநிலத் திட்ட இயக்குனர் திரு சுடலைகண்ணன் ஐஏஎஸ் அவர்கள் *Certificate of Excellence* என்கிற விருதை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களது கரங்களால் வழங்கிப் பெருமைப் படுத்தினார்.


இதுகுறித்து ஆசிரியர் சதீஷிடம் கேட்டபொழுது,  இது  மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்த விருதாகக் கருதுகிறேன் எனச் சொல்லி மகிழ்ந்தார் .
Read More »

கல்விச் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்: ஆசிரியா் அமைப்புகள் அளித்துள்ள பரிந்துரை - முழு விவரம்

Thursday, 28 May 2020

தமிழகத்தில் தொடா் விடுமுறையால் பள்ளிக் கல்விச் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்யும் வகையில் பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் சாா்பில் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.



இது தொடா்பாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனா் சா.அருணன் உள்ளிட்டோா் பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கிய பரிந்துரைகளின் விவரம்:



பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளிக்க வேண்டும். ஒரு பள்ளியில் இரண்டு நுழைவாயில்கள் இருப்பதை உறுதி செய்யலாம். கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், சில வகுப்புகளை நண்பகல் 12 மணி வரையிலும், சில வகுப்புகளை 4.30 மணி வரையிலும் இரண்டாகப் பிரிக்கலாம்.


ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, நிகழாண்டு மட்டும் இரு பருவ முறையாக மாற்றியமைத்து பாடங்களையும் அதற்கேற்ற முறையில் குறைக்கலாம். இணையதள வாய்ப்பு அனைத்து மாணவா்களுக்கும் சமமான வாய்ப்பைத் தருவது இல்லை. மாணவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் விலையின்றி முகக் கவசத்தை அரசே வழங்க வேண்டும்.


காலை வழிபாட்டு நிகழ்வை வகுப்பறையிலேயே நடத்த வேண்டும். குழு விளையாட்டுகளைத் தவிா்க்க வேண்டும். சிக்கன நடவடிக்கையாக, இட ஒதுக்கீட்டுக்காக தனியாா் பள்ளிகளுக்கு அரசு செலுத்தும் தொகையை ரத்து செய்து, அந்தத் தொகையை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம் என அதில் தெரிவித்துள்ளனா்.
Read More »

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கமும் அறிவோம் - மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.
பொருள்:
ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் எஎன்று பொருள் வருகிறது,
உண்மையான பொருள்:
மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.
Read More »

Group A,B,C,D அலுவலர்கள் யார் என்பதைக்கூறும் அரசாணை-அறிவோம்!




Read More »

அடிப்படை விதிகள் அறிவோம் - ஒரு பள்ளியில் ஒரே நேரத்தில் CL, ML, RL, EL எத்தனை ஆசிரியர்களுக்கு வழங்கலாம்?

Read More »

இனி உடனுக்குடன் PAN எண் ஒதுக்கீடு - புதிய சேவை அறிமுகம்



உடனுக்குடன் PAN எண் ஒதுக்கீடு செய்யும் சேவையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார்


கீழுள்ள இணைப்பில் உடனடி PAN எண் ஜெனரேட் செய்து PDF-ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...


https://www.incometaxindiaefiling.gov.in/e-PAN/index.html?lang=eng
Read More »

ஓய்வூதிய அரசாணை வழக்கு - ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளிபட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு : நான் 30.4.2020 - ல் ஓய்வுபெற வேண்டும் . எனக்கு 31.5.2020 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது . இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020 - ல் அரசாணை பிறப்பித்தது .


இதனால் 31.5.2020 - ல் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பயன் பெறுவர் . என்னைப்போல் ஏப்ரல் 30 - ல் ஓய்வுபெற்று பணி நீட்டிப்புப் பெற்றவர்களுக்குப் பலனில்லை.


இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது . எனவே 31.5.2020 - ல் ஓய்வு  பெறும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020 - ல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்புச் சலுகை வழங்க உத்தர விடவேண்டும் . அதுவரை என்னை மே 31 - ல் பணியில் இருந்து விடுவிக்கத் தடை விதிக்க வேண்டும் . இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது .



இதேபோல் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜவஹர் , விருதுநகர் முத்துராமலிங்கபுரம் சிவசங்கர் , செம்பட்டி பார்வதி , திருப்பத்தூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர் .


இந்த மனுக்களை நீதிபதி ஜெ.நிஷாபானு நேற்று விசாரித்தார் . மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் , ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய் வூதிய விவரங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை . மனுதாரர்களின் ஓய்வு வரம்பு மார்ச் , ஏப்ரல் மாதங்களாக இருப்பினும் , தற்போது வரை பணியில் உள்ளனர் . அப்படியிருக்கும்போது ஓய்வு வயது அதிகரிப்பு அரசாணை மனுதாரர்களுக்குப் பொருந்தாது என்பது ஏற்க முடியாது என்றார்.


அரசுத் தரப்பில் , பதில் அளிக்க  அவகாசம் கோரப்பட்டது . அப்போது குறுக்கிட்ட  அஜ்மல்கான் , ஜூன் மாதம் தொடங்க 2 நாள் மட்டுமே உள்ளது . இதனால் அதற்கு முன்பு மனுதாரர்களைப் பணியில் இருந்து விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது .

எனவே மனுதாரர்கள் 5 பேரையும் பணியில் இருந்து விடுவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றார் . இதையேற்று மனுதாரர்கள் 5 பேரையும் பணியில் இருந்து விடுவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார் , அரசுத் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3 - ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Read More »

உடற்பயிற்சியை தேர்வு செய்வது எப்படி?

  • எந்த உடற்பயிற்சி உங்களுக்கு ஏற்றதாக இருக்குமோ அதை தேர்ந்தெடுத்து அதை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.28 வயது முதல் 68 வரையிலான வயதுடையவர்களுக்கான உடற்பயிற்சி வகைகளும், கால அவகாசமும் பார்க்கலாம்.


 1. 35 முதல் 45 நிமிட நடைப்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியின் இறுதியில் ஐந்து நிமிட மூச்சுபயிற்சி. 



 2. 30 நிமிட நடைப்பயிற்சியின் முடிவில் 5 நிமிட புல் அப்ஸ். 

3. 30 நிமிட நடைப்பயிற்சியின் முடிவுல் 15 நிமிட யோகா.(தேர்ந்தெடுத்த ஆசனங்கள் மட்டும்)
4. ஏரோபிக் உடற்பயிற்சி எனில் 35 நிமிடங்கள், 5 நிமிட அமைதியான இருத்தல் 


5. அவுட்டோர் சைக்கிளிங் என்றால் 30 நிமிடம் 

 6. உடற்பயிற்சி எந்திரங்களில் ஏரோபிக் பயிற்சி என்றால் 30 நிமிடம் 


 7. டிரெட் மில் எனில் 15 +15 நிமிடங்கள் இரண்டு நிமிட இடைவேளி எடுத்துக்கொண்டு.
 8. நீச்சல் பயிற்சி - வார்ம் வாட்டர் பூல் எனில் 30 நிமிடங்கள், நார்மல் வாட்டர் எனில் 45 நிமிடங்கள் 

 9. படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது( 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும், மூட்டுவலி பிரச்சனை இல்லாதவர்கள் செய்யலாம். 


அடுக்கங்களில் 150 படிக்கட்டுகள் ஏறி இறங்கலாம். 30 நிமிடங்கள்) 

 10. பாட்மிட்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஃபுட்பால், ஸ்குவாஸ் போன்ற விளையாட்டுகள் எனில் குறைந்தது 1 மணிநேரம்.
Read More »

எஸ்.பி.ஐ.-யில் 'செக்' பயன்படுத்துகிறீர்களா? அவசியம் இதை தெரிஞ்சுகோங்க!

  • எஸ்.பி.ஐ.-யில் 'செக்' பயன்படுத்துகிறீர்களா? அவசியம் இதை தெரிஞ்சுகோங்க! 




நீங்கள் ஒரு காசோலையில் கையெழுத்திட்டுள்ளீர்களா, அதை அவசரமாக நிறுத்த விரும்புகிறீர்களா? 


வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு உள்ள வங்கி கிளைக்கு செல்லாமலேயே அதை நிறுத்தும் வசதியை பாரத ஸ்டேட் வங்கி வழங்குகிறது. உங்கள் வீட்டில் வசதியாக இருந்துக் கொண்டு ஒரு காசோலை செயலாக்கப்படுவதை நீங்கள் நிறுத்தலாம். எஸ்பிஐ யின் YONO Lite ஆப்பை பயன்படுத்தி இதை நீங்கள் செய்யலாம். 


YONO Lite எஸ்பிஐ ஆப்பை பயன்படுத்தி ஒரு காசோலையை எவ்வாறு நிறுத்துவது.Yono Lite SBI ஆப்பில் லாகின் செய்து கொள்ளவும். 'Requests' >> 'Cheque Book' >> 'Stop/Revoke Cheque' என்பதை சொடுக்கவும். 


 'Stop Cheque' எனற பொத்தானை அழுத்தவும். வங்கி கணக்கு எண்ணை தேர்ந்தெடுக்கவும் காசோலையின் தொடக்க எண் (start cheque numbe) (கண்டிப்பாக) மற்றும் முடியும் எண் (end cheque number) ஆகியவற்றை வழங்கவும். 


கருவி வகையைத் தேர்ந்தெடுக்கவும். காசோலையை நிறுத்துவதற்கான காரணத்தை வழங்கவும். இது கட்டாயத் தேவை நீங்கள் காசோலையை நிறுத்துவதற்கான காரணத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளை ஏற்றுக் கொள்ளவும். சமர்ப்பி என்பதை சொடுக்கவும். கைபேசியில் கிடைக்கப்பெற்ற OTP எண்ணை வழங்கவும். 

நீங்கள் கோரிய காசோலை(கள்) நிறுத்தப்படும். காசோலையை நிறுத்த இது ஒரு சுலபமான வழியாகும். வங்கி இந்த சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. ஒரே நேரத்தில் பல காசோலைகளை நிறுத்த நீட்டிக்கப்பட்ட வசதி பயன்படுத்தப்படலாம் 


 இது மட்டுமல்ல நீங்கள் காசோலையை நிறுத்தியதையும் ரத்து செய்யலாம் (cancel the Cheque stop). இது எப்படி என்பதை பார்ப்போம். Yono Lite SBI க்குள் லாகின் செய்துக் கொள்ளவும். 'Requests' >> 'Cheque Book' >> 'Stop/Revoke Cheque' என்பதை சொடுக்கவும். 'Revoke Cheque' என்ற பொத்தானை அழுத்தவும். 


உங்கள் வங்கி கணக்கு எண்ணை தேர்வு செய்யவும். நீங்கள் திரும்ப பெற வேண்டிய (revoke) காசோலையின் தொடக்க எண் (start cheque numbe) (கட்டாயம்) மற்றும் முடியும் எண்ணை (end cheque number) வழங்கவும். கருவி வகையைத் தேர்ந்தெடுக்கவும். வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவும். 


சமர்பி என்பதை தேர்வு செய்யவும். கைபேசியில் கிடைக்கப்பெற்ற OTP எண்ணை உள்ளீடு செய்யவும். நீங்கள் கோரிய காசோலை (கள்) ரத்து செய்யப்படும்
Read More »

Flash News : பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து அரசாணை வெளியீடு(CEO, DEO Transfer & Promotion Order - Proceedings)


அரசாணையில் , முதன்மை கல்வி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டும் , மாவட்டக் கல்வி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.


CEO Transfer And DEO Pro GO - Download here



மேற்காணும் அரசாணையில் , மாறுதல் அளிக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தனது பணியிட பொறுப்புகளை மாவட்டத்தில் உள்ள மூத்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு உடன் புதிய பணியிடத்தில் சேருமாறும் , பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு உடன் புதிய பணியிடத்தில் பணியில் சேருமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பு நியமனத்திற்கான பின்னேற்பு ஆணை கோரி , தனியே கருத்துரு அனுப்புமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .


மேற்கண்டவாறு முழு கூடுதல் பொறுப்பேற்கும் அலுவலர் / தலைமை ஆசிரியர்கள் புதிய அலுவலர் பணியேற்கும் வரை உண்டியல்கள் ஏற்பளிப்பது உள்ளிட்ட நிதி அதிகாரத்துடன் கூடிய முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.


பணிவிடுவிக்கப்படும் அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரிந்த அலுவலர்கள் சார்பாக மந்தண அறிக்கைகள் எழுத வேண்டியிருப்பின் , அதனை முடித்துவிட்டு புதிய பணியிடத்தில் சேருமாறும் , பணிவிடுவிப்பு மற்றும் பணியேற்பு அறிக்கையினை உடன் இவ்வியக்ககம் அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
Read More »

மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கி அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!




கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு இன்னும் அமலில் இருப்பதால், தொழில்கள் முடங்கியதுடன் தொழிலாளர்களின் வாழ்க்கையும் முடங்கியுள்ளது. அன்றாடம் உணவுக்கே திண்டாடும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் தான் நலிவடைந்த மக்களுக்குத் தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பயிலும், நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கரோனா நிவாரணம் வழங்கியுள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 800- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தொடர் சாதனையைத் தக்க வைத்துள்ளனர். தொடர் சாதனையைப் பார்த்து அருகில் உள்ள பேராவூரணி நகரில் இருந்தும் பலர் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர். குறிப்பாக இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் 80% மாணவர்கள் விவசாயிகளின் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தான் கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, இப்பள்ளியில் பயிலும் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் சிரமப்பட்டு வருவதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் 264 மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து, தங்கள் சொந்தப் பணத்தில் தலா ரூபாய் 500 வீதம், ரூபாய் 1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கினர்.
புதன்கிழமை மாலை சமூக இடைவெளியோடு பள்ளியில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை கு.மகேஸ்வரி தலைமை வகித்தார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஏ.பிரகாஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
இதேபோல புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் மாணவர்களின் குடும்ப நிலை அறிந்து உதவிகள் செய்து வருகின்றனர்.
Read More »

CPS NEWS

Cps ல் பிழைகளை  online ல் பிறந்ததேதி,பெயர் திருத்தம் சரி செய்தல்  சார்பாக சென்னை Data center ஆணையரின்  27.05.2020 ன் கடிதம்

Read More »

வேதியியல் பாடத்தேர்வுக்கு 'போனஸ்' மதிப்பெண் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

பிளஸ் 2 வேதியியல் தேர்வில், ஒரு கேள்வியில் மொழிபெயர்ப்பு பிழை இருந்ததால், 3 மதிப்பெண் போனசாக வழங்க, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது.


ஒவ்வொரு பாட வாரியாகவும் வழங்கப்பட்ட விடைக்குறிப்புகளை ஆய்வு செய்து, தலைமை மதிப்பீட்டாளர்கள் விடைகளை திருத்தினர். இதில், தவறான விடை குறிப்புகள் மற்றும் பிழையான கேள்விகளை, தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர்களிடம் தெரிவித்தனர். 


அதன்படி, வேதியியல் தேர்வில், புரதத்தின் வகைகள் குறித்த கேள்வியில், ஆங்கிலத்தில் சரியாகவும், தமிழில் பிழையும் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து, பள்ளி கல்வித் துறையின் தேர்வு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, அந்த கேள்விக்கு, தமிழ் வழி மாணவர்கள் பதில் எழுத முயற்சித்திருந்தால், அவர்களுக்கு, 3 மதிப்பெண் போனசாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

இபாக்ஸ் மூலமாக இலவச ஆன்லைன் பயிற்சி ஜூன் 15-ல் தொடக்கம். இன்று முதல் பதிவு செய்யலாம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக ஆன்-லைன் இலவச பயிற்சி வழங்க தமிழக அறிவித்துள்ளது. Ebox. என்ற தனியார் நிறுவனம் மூலம் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என ஆன்-லைன் வகுப்பு நடைபெற உள்ளது. ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் கீழ்கண்ட இணைய லிங்கில் சென்று பதிவு செய்யவும்.

http://app.eboxcolleges.com/neetregister

மேலும் விவரம் அறிய...

Ebox - neet online Class - Download here
Read More »

ஓய்வு வயது உயர்வு சலுகை கோரிய ஆசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிக்கத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு



அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணையின் பலனை ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சிவகங்கை அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நான் 30.4.2020-ல் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். எனக்கு 31.5.2020 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020-ல் அரசாணை பிறப்பித்தது.


இந்த அரசாணையால் 31.5.2020-ல் வழக்கமாக ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். என்னைப்போல் ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்றவர்களுக்கு பலனில்லை. இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.


எனவே 31.5.2020-ல் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020-ல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை என்னை மே 31-ல் பணியிலிருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர், விருதுநகர் முத்துராமலிங்கபுரம் சிவசங்கர், செம்பட்டி பார்வதி, திருப்பத்தூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.


இந்த மனுக்களை நீதிபதி ஜெ.நிஷாபானு இன்று விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய விவரங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை. மனுதாரர்களின் ஓய்வு வரம்பு மார்ச், ஏப்ரல் மாதங்களாக இருப்பினும், தற்போதுவரை பணியில் உள்ளனர். அப்படியிருக்கும் போது ஓய்வு வயது அதிகரிப்பு அரசாணை மனுதாரர்களுக்கு பொருந்தாது என்பது ஏற்க முடியாதது என்றார்.


அரசுத்தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட அஜ்மல்கான், ஜூன் மாதம் தொடங்க 2 நாள் மட்டுமே உள்ளது. இதனால் அதற்கு முன்பு மனுதாரர்களை பணியிலிருந்து விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.


இதையேற்று மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Read More »

EBox NEET Weekly and Daily schedule - School Education Published.

Wednesday, 27 May 2020



IMG_20200527_195307

We wish to inform that the Department of School Education in association with Amphisoft Technologies E - box will be offering the Free NEET Online Crash Course to Government and Government Aided Schools students registered for NEET 2020 examination.


EBox NEET Weekly and Daily schedule - Download here...


This course will be offered for both English Medium and Tamil Medium students. Moreover Amphisoft's technology enabled learning platform E - Box is used by all top Higher Education Universities and Colleges in India to drive practice oriented systematic learning. MHRD and AICTE have recently recognized and endorsed E Box as a comprehensive learning and assessment platform. In the reference letter cited it is informed that this Cost - Free NEET Online Crash Course will be a well - structured , activity driven program delivered by the experts in the field. Students enrolled in this Crash Course will solve around 6500+ Questions covering all concepts in Physics , Chemistry , Botany and Zoology.


The course will cover the following activities :
1. 80 Chapter wise Practice Tests
2. 80 Formative Tests
3. 5 Unit Tests
4. 2 Half Portion Tests
5. 10 Full Portion Tests


Moreover it is informed that the training comprises of 4hours of video lectures and 4 hours of practice tests and formative tests as given in the attached detailed schedule . The videos of classes taken by subject matter experts available with us shall be used for this program. Amphisoft shall offer a comprehensive intelligent dashboard to track the progress of individual students during the training program.



Registrations for this Crash Course will start from 27th May , 2020. All the Chief Educational officers are informed that students who have registered for NEET 2020 examination can register for this course in the following link :

http://app.eboxcolleges.com/neetregister

The Crash Course will commence from Monday , 15th June , 2020
IMG_20200527_194610


IMG_20200527_194639
Read More »

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை கட்டாயப்படுத்தி கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தமிழகத்தில் வகுப்பறை நோக்கின் என்ற செயலியை பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் லதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் சுடலைக் கண்ணன், மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வகுப்பறை நோக்கின் என்ற செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் திறப்பு குறித்து இப்போது ஏதும் சொல்வதற்கு இல்லை. தனியார் பள்ளிகள் கட்டாயமாக கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது. அப்படி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் வேளையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழு த உள்ள மாணவர்களின் உடல் நலம் தொடர்பான விவரங்களை வாங்கியுள்ளோம். தேர்வு எழுதும் மணவர்கள் அனைவருக்கும் முகக் கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் யாராவது வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் இருந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும். இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டம் குறைப்பது குறித்தும் இன்னும் முடிவு செய்யப்பவில்லை. அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு பரிந்துரை கொடுத்த பிறகு பாடத்திட்டம் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.


தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண குழு தலைவர் பதவி காலியாக உள்ளது. அதற்கான நபரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்ற விவரங்கள் ஏதும் வரவில்லை. மாணவர்களுக்கு அதுபோல இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக ஆன் லைனில் பாடம் நடத்தக் கூடாது என அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் பின்னர், ஆன்லைனில் வகுப்பு நடத்துவதை யாரும் தடுக்க முடியாது. ஜூம் ஆப்பில் வைத்து நடத்துவது நல்லது என்றார்.
Read More »

பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீடிக்கிறது: உள்துறை அமைச்சகம் தகவல்

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரமாகி வருவதால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதில் சந்தேகம் நிலவுகிறது.

இந்நிலையில், மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. தமிழகத்தில் கூட ஆகஸ்ட்டில் கல்வி நிலையங்களை திறக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை. அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பதற்கு தடை நீடிக்கிறது,' என்றார்.
Read More »

Phonics All Sounds - Pdf

Read More »

நடப்பு கல்வி ஆண்டில் பாட அளவை குறைக்க திட்டம் - வேலைநாட்கள் எண்ணிக்கையில் சிக்கலை தவிர்க்க நடவடிக்கை

Read More »

மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்பு எடுக்க தான் தடைவிதிக்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது- அமைச்சர் செங்கோட்டையன்.



*ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் எச்சரிக்கை.


*ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

*பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்.



*பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைப்பு

*குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்


Updated News -  தனியார் பள்ளிகள் இணைய வழி வகுப்புகள் எடுக்க தடை இல்லை. ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் எடுக்க கூடாது - அமைச்சர் விளக்கம்..

Read More »

பள்ளி திறக்கும் முன் என்ன செய்ய வேண்டும்?

Read More »

பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக அரசு சார்பில் வல்லுநர் குழு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமலிலிருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது எனவும், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.


மேலும் அவர், பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள நிலையில், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்புக்குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Read More »

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்றுதுவக்கம்; ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு ஏற்பாடு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த பணிகள் இன்று(மே 27) துவங்கும் நிலையில், திருத்தும் மையங்களில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளின் பட்டியலை ஒட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச்சில் முடிந்தன. விடைத்தாள்கள், கட்டுக்காப்பு மையங்களில், இரண்டு மாதங்களாக, போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விடைத்தாள் திருத்த பணிகள், இன்று துவங்க உள்ளன. ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும், திருத்தும் பணிகளை திட்டமிட்டபடி துவங்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.திருத்தும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை என்றால், கல்வி துறையின் சார்பில் கார் அனுப்பி, அவர்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம், 44 ஆயிரம் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட உள்ளனர்.

அனைத்து ஆசிரியர்களுக்கும், திருத்தும் மையங்களில், முகக் கவசம் இலவசமாக வழங்கப்படும். மையங்களில் சானிடைசர் வைக்கப்பட்டிருக்கும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மேலும், ஒவ்வொரு மையங்களிலும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு யார் வாயிலாவது, கொரோனா பரவாமல் தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அருகில் உள்ள, கொரோனா வுக்கு சிகிச்சை தரும் மருத்துவமனைகளின் முகவரி, தொலைபேசி எண், சுகாதாரத்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட பட்டியலை, பள்ளிகளில் ஒட்டிவைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.திருத்தும் மையங்களில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் இன்றி பணியில் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிடுக்கிப்பிடி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன
Read More »
 

Most Reading

Tags

Sidebar One