Search

School Morning Prayer Activities - 04.03.2020

Tuesday, 3 March 2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.03.20

திருக்குறள்

அதிகாரம்:கல்வி

திருக்குறள்:396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

விளக்கம்:

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

பழமொழி

Justice for the self is not the same to others.

 ஊருக்கு ஒரு நியாயம். தனக்கு ஒரு நியாயம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.

2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை.

பொன்மொழி

எந்நேரமும் நம் சிந்தையை வெற்றி  அடைய வேண்டும் என்று நிர்ணயித்தால்   இந்த வையம் நம்மை  புகழும் ...

______பரமஹம்சர்

பொது அறிவு

1.மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது?

1968

2.இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?

ஐசக் நியூட்டன்

English words & meanings

• Hair - a thin strand grows on the head and body of the people. உரோமம்

• Hare - a rabbit like animal with longer legs and ears. முயலின் ஒரு வகை.

ஆரோக்ய வாழ்வு

சீதாப்பழத்தில் நியாசின் மற்றும் டயட்ரி நார்ச்சத்துக்கள் உள்ளன .எனவே இவை கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கின்றன.

Some important  abbreviations for students

OLED - Organic light-emitting

IMEI - International Mobile Equipment Identity

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

குளக்கரை மீன்கள்

குளக்கரையின் கரையோரத்தில் கொக்கு ஒன்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்று கொக்கிடம் வந்து என்ன கொக்காரே! உமது ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்? என்று கேட்டது. அதற்கு கொக்கு செம்படவன் ஒருவன் வந்து ஒட்டுமொத்தமாக உங்கள் அனைவரையும் பிடித்துச் செல்லப் போகிறான் என்றது.

இதனைக்கேட்ட அம்மீன் உடனே உள்ளே சென்றுவிட்டது. சில நிமிடம் கழித்து பல மீன்கள் மேலே வந்து கொக்கின் முன்பு துள்ளியது. அனைத்து மீன்களும் கொக்கிடம் வந்து உதவிக்கேட்டன. அதற்கு கொக்கு உங்களை இந்த குளத்திலிருந்து வேறு குளத்திற்கு மாற்றிவிட்டால் வேண்டுமானால் நீங்கள் தப்பிக்க முடியும் என்றதும் மீன்களும் சம்மதித்தது.

நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது. குளத்திலிருந்த நண்டு ஒன்றிற்கு தானும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. கொக்கிடம் என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுப் போங்கள் என்று கெஞ்சியது. ஒப்புக்கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு. தன் உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. அதனால் கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன் என்றது நண்டு.

ஆஹா! நமக்கு யோகம் அடித்தது என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது. குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

நீதி :
பிறர் சொல்லும் யோசனைகள் அனைத்தையும் அப்படியே ஏற்பது நன்றன்று.

இன்றைய செய்திகள்

04.03.20

◆மேட்டூர் - சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கு 241 ஏக்கர் பட்டா நிலத்தை ஆர்ஜிதம் செய்ய ரூ.35 கோடி உட்பட ரூ.565 கோடி நிதிக்கான ஒப்புதல் அளித்துள்ள தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

◆ஐரோப்பிய நாடான அர்மேனியாவுக்கு ரூ.290 கோடி மதிப்புள்ள ஸ்வாதி ஆயுதங்களை விற்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் ஆயுத விற்பனையில் ரஷ்யா, போலந்தை இந்தியா முந்தியுள்ளது.

◆இலங்கையில் நாடாளுமன்ற பதவி காலம் நிறைவடைய ஆறு மாதம் இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

◆கொல்கத்தாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதிச்சுற்றில் பலம் வாய்ந்த கர்நாடகத்தை பெங்கால் அணி வென்று இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளது.

◆கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறவிருந்த ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு பொதுச் செயலா் சைரஸ் போன்சா தெரிவித்துள்ளாா்.

Today's Headlines

🌸The Government of Tamil Nadu has approved a Rs 565 crore fund including Rs 35 crore to acquire 241 acres of paddy land for Mettur - Sarabanka hydropower project for this a government order has been issued.

🌸 India has signed an agreement to sell Swati weapons worth Rs.290 crores to Armenia.  This puts India ahead of Russia and Poland in arms sales.

 🌸Sri Lanka President Gotabhaya Rajapakse has ordered the dissolution of parliament, in spite of the six more months of his tenure to end.

 🌸The Bengal team have entered the final round of the Ranji Trophy semi-final in Kolkata.

🌸  Due to the affect of  coronavirus ,Indian Squash Federation General Secretary Cyrus Bonsa has said that the squash championship for Asian teams which is to be held in Kuala Lumpur, the Malaysian capital, has been postponed .

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One