Search

கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமல்!

Monday, 16 March 2020



கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு இக்கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகளை தடுக்க நடவடிக்கை

*வங்கிகளில் அதிகரித்து வரும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாகவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளிலும் நடைபெறும் மோசடிகளைக் கட்டுப்படுத்த சில கடுமையான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. முன்பு கார்டுகளைக் கொண்டு எந்தவிதமான பணப் பரிவர்த்தனைகளையும் எளிதாக மேற்கொள்ளும் வசதி இருந்த நிலையில், இனி அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகளை மட்டுமே

*அதாவது இனி புதிதாக வழங்கப்படும் கிரெடிட், டெபிட் கார்டுகளைக் கொண்டு உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். அதுவும் ஏடிஎம், ஸ்வைப்பிங் மெஷின்களில் மட்டுமே இந்தப் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

*சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்கும், ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும், கார்டுகள் இல்லாத இதர பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்கள் தனியாக அதற்கான வசதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*மொபைல் செயலி மூலமாகவோ, இண்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ, ஏடிஎம்களிலோ அல்லது வாய்ஸ் ரெஸ்பான்ஸ் வசதியின் மூலமாகவோ இந்தச் சேவைகளை வாடிக்கையாளர்கள் சேர்த்துக்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் கார்டுகளை என்ன செய்வது?

*ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஏடிஎம் கார்களுகளுக்கு வாடிக்கையாளர்கள் மேற்கூறிய சேவைகளில் ஏதேனும் ஒன்றை முடக்கலாமா என்பதை தீர்மானிக்க முடியும்.

*மொபைல் வங்கியியல், நிகர வங்கி விருப்பத்தை வரம்பை இயக்குவதற்கும், சேவையை 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படுத்தவும் முடக்கவும் ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது.

*கார்டுகளின் நிலையில் வாடிக்கையாளர் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால், வங்கி வாடிக்கையாளரை SMS / மின்னஞ்சல் மூலம் எச்சரித்து வங்கிகள் தகவல்களை அனுப்பும்.

*எந்தவொரு பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படாத கார்டுகளில், சர்வதேசப் பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள், கார்டுகள் இல்லாத பரிவர்த்தனைகள் தானாகவே ரத்து செய்யப்பட்டுவிடும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

*இதன் மூலமாக வங்கிப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One