Search

கொரோனா வைரஸ் - விழிப்புணர்வு செய்தி - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு

Wednesday, 4 March 2020


கொரோனா வைரஸ் ( nCov - 2019 )

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி , இருமல் , காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும் . சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது . இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .

நோயின் அறிகுறிகள் :

- காய்ச்சல் , இருமல் மற்றும் சளி - உடல் சோர்வு - ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் .

கொரோனாவைரஸ் நோய் பரவும் விதம் :

நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும் , தும்மும் போதும் , வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது . மேலும் இருமல் மற்றும் தும்பல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது .

நோய் தடுப்பு நடவடிக்கைகள் :

தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு , நன்கு தேய்த்து கழுவ வேண்டும் . இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கை குட்டை கொண்டு மூடி கொள்ள வேண்டும் . சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும் .

சிகிச்சைகள்

 சளி , இருமல் மற்றும் காய்ச்சல் , போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அனுகவும் .  இளநீர் , ஓ . ஆர் . எஸ் , கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருகுதல் வேண்டும்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One