Search

கொரனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9ஆம் வகுப்புவரை விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Saturday, 14 March 2020


1 . கொரனோ வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனிதர்களை கொன்று குவிக்கிறது . இவ்வைரஸ் இந்தியாவில் பல மாநிலங்களில் மிக விரைவாக பரவி வருகிறது . தமிழகத்திற்கு அருகே உள்ள கேரளா , கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது .

2. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மனிதர்கள் கூட்டமாக வசித்தால் இத்தொற்றுநோய் மிக விரைவில் பரவுகிறது .

3. பள்ளி என்ற பொது அமைப்பும் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக படிக்கக்கூடிய செயல் இந்நோய் பள்ளி மாணவர்களை எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்காமல் இருப்பதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் விடுமுறை விட்டு மாணவர்களின் உயிரைக் காக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

4 . 12 , 11 , 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளைத் தவிர ( 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ) தேர்வுகளை இரத்து செய்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் .

5. அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை வைத்து முழு ஆண்டு தேர்ச்சி வழங்க வேண்டும் ( ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வரை ) .

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One