தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 3 வகுப்புகளுக்கான தேர்வுகளில் 25 லட்சத்து 87 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில், தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்வுக் கண்காணிப்பாளர்களுக்கு சில விதிகளை தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில் 16 வகையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உதவியுடன் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ள நிலையில், புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை இயக்கங்களைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
16 வகையான தண்டனைகள்
தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்வுக் கண்காணிப்பாளர்களுக்கு சில விதிகளை தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில் 16 வகையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தேர்வு எழுதும்போது துண்டுச் சீட்டுகள் வைத்திருத்தல், புத்தகங்கள் வைத்திருப்பது கண்டுபிடித்தால் அவர்கள் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அடுத்த மாணவரை பார்த்து எழுதினாலோ, வெளியில் இருந்து யாராவது உதவி செய்தாலோ அந்த மாணவர்களிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி வாங்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் அந்த தேர்வு எழுத முடியாது. மேலும் ஒரு ஆண்டுக்கு தேர்வு எழுத முடியாது.
Search
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment