Search

அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு.

Monday, 24 February 2020

அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள UDISE PLUS DCF படிவத்தை பூர்த்தி செய்து தயாராக வைக்க வேண்டும் . 

அவ்வாறு பூர்த்தி செய்த படிவத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதி ஏற்படுத்திய உடனே பதிவேற்றம் செய்திட வேண்டும் . UDISE PLUS DCF படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட தகவலுக்கும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தகவலுக்கும் எவ்வித முரண்பாடும் ஏற்படாவண்ணம் கவனத்துடன் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . ஒவ்வொரு ஆசிரியர்பயிற்றுநரும் தங்களுக்குகீழ் உள்ள பள்ளிகளில் பூர்த்தி செய்யப்பட்ட DCF படிவமும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலும் சரியானது என சான்று அளிக்க வேண்டும் . 

வட்டார கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளின் சரியான தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து அதற்குரிய சான்றை பெற்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் .

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One