ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில், சேமிப்புக் கணக்குகள் அல்லது பிற கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் சேமிப்பு மற்றும் பிற வகையான கணக்குகளை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், வரும் 28-ம் தேதிக்குள் KYC எனும் படிவத்தை சமர்ப்பிக்கவில்லை என்றால் கணக்கு முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.KYC - Know Your Customer எனப்படும் உங்களது வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் என்ற படிவம் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வங்கிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையிலோ அல்லது நெட் பேக்கிங் மூலமாகவோ ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிக் கிளைகளில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதாக இருப்பின், கணக்கிற்கு உரிய நபர் நேரடியாகச் சென்று இணைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்புப்படி இம்மாதம் 28-க்குள் KYC இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2002, பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படியும், அச்சட்டத்தின் விதிமுறைகளின்படியும் வங்கிகள் அடையாள நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமானதாகிறது
No comments:
Post a Comment