புதிய கல்விக் கொள்கை இந்தாண்டு அமல்படுத்தப்படும், புதிய கல்விக் கொள்கையை தமிழகம் எதிர்க்கவில்லை என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரின் ஆலோசகர் உமாகாந்த் திரிபாதி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பள்ளி விழாவில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரின் ஆலோசகர் உமாகாந்த் திரிபாதி பங்கேற்றார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘புதிய கல்விக் கொள்கை இந்தாண்டு அமலுக்கு வருகிறது. இது மத்திய அரசின்மனித வள மேம்பாட்டு அமைச்சத்தின் பெரும் சாதனையாகும்.மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததும், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் புதிய திட்டங்கள் குறித்துஆலோசிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
புதிய கல்வி கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. தமிழகமும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தவதில் எவ்வித சிக்கலும் இல்லை”என்று திரிபாதி தெரிவித்தார்.
Search
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment