மத்திய அரசு சமீபத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் மாற்றங்கள் கொண்டு வந்தது . மக்கள் புதிய வரி முறையை பின்பற்றலாம் அல்லது முந்தைய வரி முறையிலேயே தொடரலாம் என்று அறிவித்தது.
இந்நிலையில் புதிய மற்றும் முந்தைய வரி முறையில் கிடைக்கக்கூடிய அனு கூலங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இ - கால்குலேட்டர் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது . அதன்படி , சம்பளதாரர்கள் அவர்களுக்கு பலனளிக்கக்கூடிய வரி முறைகளை இந்த இ - கால் குலேட்டர் மூலம் தெரிந்து கொள்ள லாம் . புதிய வரி வரம்பின்படி அவர்கள் செலுத்த வேண்டியவரித் தொகையையும் , முந்தைய வரி வரம்பின்படி அவர்கள் செலுத்த வேண்டிய வரித் தொகையையும் இ - கால்குலேட்டரில் ஒப்பீடு செய்து கொள்ளலாம் . வரி சலுகைகள் ரத்து புதிய வரி முறையை தேர்வு செய்பவர்கள் 80 - சி - யின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகள் எதையும் பெற முடியாது .
இதனால் மக்களிடையே எந்த வரி முறையை தேர்வு செய்வது என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் அவர்களுக்கு எந்த வரி முறையில் அனுகூலம் என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த இ - கால்குலேட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது . www . incometaxindiaefiling . gov . in என்ற தளத்தில் இ - கால்குலேட்டர் வசதியை பயன்படுத்திக் கொள்ள லாம்.
Search
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment