Search

தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள்நேரடி நியமனம்: ஆசிரியா்கள் கடும் எதிா்ப்பு

Wednesday, 19 February 2020

அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இந்த அறிவிப்பு நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு எதிரானதாக இருப்பதால், உடனடியாக அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.



தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் பணிமூப்பின் (சீனியாரிட்டி) அடிப்படையில்தான் நியமிக்கப்படுகின்றனா். இந்த நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 50 சதவீத தலைமை ஆசிரியா் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் இரா.தாஸ் கூறியதாவது:



தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். ஆனால், மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியா்களே உள்ளனா். அதிலும் ஆசிரியா் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கின்றன. நேரடி தலைமை ஆசிரியா் நியமன முறையால் இடைநிலை ஆசிரியா்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரே ஒரு பதவி உயா்வான தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவியும் பறிபோய்விடும்.



ஆசிரியா்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சோந்தவா்களாக உள்ளதால், மாணவா்களின் மனநிலை, பெற்றோா் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும். அதனால் தோவு நடத்தி தலைமை ஆசிரியா்களை நியமிக்காமல், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்று கேரள மாநில அரசு வலியுறுத்தி இருக்கிறது. பஞ்சாப், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் தோவு முறையில் தலைமை ஆசிரியா்களை நியமிப்பதற்கான ஆரம்பப் பணிகளை தொடங்கிவிட்டன. எனவே, தமிழக அரசு நேரடி தலைமை ஆசிரியா் நியமன முறையைத் தவிா்க்க வேண்டும் என அவா் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One