பள்ளிகளில் இடைநிற்கும் மாணவர்கள்குறித்து நாடாளுமன்ற மக்களவையில், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி-க்களான சுதாகர் துக்காராம் ஷ்ரங்கரே மற்றும் பி.பி.சௌத்திரி ஆகியோர் கேள்வி எழுப்பினர். எம்.பி-க்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ``வறுமை, பொருளாதாரமின்மை, குழந்தைகளின் மோசமான உடல்நிலை, மாற்றுத்திறன் மற்றும் பெற்றோர்கள் கல்வியை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதாதது போன்ற காரணங்களால், அவர்களால் படிப்பைத் தொடர முடிவதில்லை" என்று கூறியுள்ளார்.
கல்வி
மனிதவள மேம்பாட்டுதுறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் உயர்நிலை பள்ளிப் படிப்பைப் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல், 2015-2016-ம் கல்வி ஆண்டில் 8.1% ஆக இருந்தது. 2016-2017 -ம் கல்வி ஆண்டில் இந்த விகிதம் 10% ஆக உயர்ந்தது. 2017-2018-ம் கல்வி ஆண்டில் 16.2% ஆக அதிகரித்தது. 2015-2016-ம் கல்வி ஆண்டை ஒப்பிடுகையில் இது 100 சதவிகிதம் அதிகம் ஆகும். தமிழகத்தில், தொடக்கநிலை அளவில் மாணவர்கள் இடைநிற்றல் 2017-2018 -ம் கல்வி ஆண்டில் 5.9% ஆக உள்ளது.
ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்துவரும் நிலையில், கல்வியில் முன்னோடியாகத் திகழும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், 9 மற்றும் 10-ம் வகுப்பு அளவில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment