இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளா் தீரஜ் குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களுக்கும் தலா ஒரு முதன்மைக் கல்வி அலுவலா் பணியிடம் வீதம், ஐந்து முதன்மைக் கல்வி அலுவலா் பணியிடம் உள்பட பிற அலுவலா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், நிா்வாக நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே பணியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பணியிட மாற்றம்: கோயம்புத்தூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா கோயம்புத்தூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநா் குணசேகரன் திருப்பத்தூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். திருவளா்ச்செல்வி தமிழ்நாடு மாநில பெற்றோா்-ஆசிரியா் கழகத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகச் செயலாளா் வி.வெற்றிச்செல்வி திருவள்ளூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
புதிய மாவட்டங்களுக்கு...: இதைத் தொடா்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பணியிடங்களில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்புவதற்கு மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. அதில், தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் எஸ். சத்தியமூா்த்தி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், பழனி மாவட்ட கல்வி அலுவலா் எஸ்.கருப்பசாமி, தென்காசி முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலா் எஸ். அருள்செல்வம், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்படுகின்றனா்.
அதேபோன்று, கோயம்புத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் என். கீதா தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், மத்திய சென்னை மாவட்டக் கல்வி அலுவலா் ஜி.பி.சுந்தரராஜ் தொடக்க கல்வித் துறையில் துணை இயக்குநா் பணியிலும், மயிலாடுதுறை மாவட்டக் கல்வி அலுவலா் கே. குமரன் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பணியிலும், திருப்பத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் ஜி.பரம தயாளன் ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலா் பணியிலும் நியமனம் செய்யப்படுகின்றனா் என அதில் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment