Search

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை!

Monday, 3 February 2020

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சி ஏதுவாக தேர்வு என்று தெரிவித்த பள்ளி கல்வி ஆணையர், பொதுத்தேர்வு அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்தி வைக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்படுகிறது.

இந்த சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. குழந்தைகளால் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாது, பயம் கலந்த சூழல் காரணமாக கற்றல் திறன் பாதிக்கும் என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.

ஒவ்வொருவரும் கல்வியறிவு பெற வேண்டியது அவசியம். தேர்ச்சி பெற முடியாத மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி, மனரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One