Search

ஏப். 26ல் ஆசிரியர்கள் தொடர்முழக்க போராட்டம்: ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தகவல்

Sunday, 23 February 2020

சென்னையில் ஏப்., 26ல் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழக அரசு 5, 8 ம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்பை திரும்ப பெற்றதை வரவேற்கிறோம். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி 2018 நவ., 26 ல், மாநிலம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக 1,500 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.


உயர்நீதிமன்றம் இதை ரத்து செய்தது. போலீஸ் எப்.ஐ.ஆர்., பேரில் கல்வி துறையால் வழங்கப்பட்ட 17 பி நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான 17 பி நடவடிக்கை, குற்ற நடவடிக்கைகளை அரசு திரும்ப பெற வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால் 7,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியவில்லை. பணியில் உள்ளவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பலன்களை பெற முடியவில்லை.


ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப்பெறக் கோரி உயர் அலுவலர்களிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெறக்கோரி ஏப்.,26 சென்னையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டம் நடக்கவிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One