Search

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.02.20

Thursday, 20 February 2020

திருக்குறள்



அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:386

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

விளக்கம்:

காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

பழமொழி

PREVENTION IS BETTER THEN CURE

     வெள்ளம் வருமுன்னே அணை போட வேண்டும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.

பொன்மொழி

ஒரு செயலை செவ்வனே செய்வேன் என உறுதி கொண்டவரது உழைப்பு அவரை மிக உயரத்தில் வைத்து அழகு பார்க்கும்......அப்துல் கலாம்..

பொது அறிவு

1. பிரதமாரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது?

சுவிட்சர்லாந்து

2. வாட்சுகளுக்கும் சாக்லேட்களுக்கும் பெயர் போன நாடு எது?

சுவிட்சர்லாந்து

English words & meanings

Vulcanology – study of volcanoes. எரிமலைகள் குறித்த படிப்பு. எரிமலையியல்.

Varicolored - consisting of different colours. வண்ணக் கதம்பம். வண்ணக் கலவை

ஆரோக்ய வாழ்வு

பேரீச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து உடலில் இரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தை குறைத்து, உடலில் ரத்தத்தின் அளவு சீராக இருக்க பயன்படுகிறது.

Some important  abbreviations for students

lat. - latitude

long.- longitude

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

பொறாமையால் ஏற்பட்ட இழப்பு

குறள் :
அழுக்காறென ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

விளக்கம் :
மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளும் ஒருவன், தன் செல்வத்தையெல்லாம் இழந்து தீய வழிகளில் செயல்பட்டு சீர்குலைவான்.

கதை :
கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார்.

ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது.

மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது.

இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார்.

ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது.

மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.

நீதி :
பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு

*சாத்பூராமலைத்தொடர் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும்.

*இது கிழக்குக் குஜராத்தில் அரபிக் கடலுக்கு அருகில் தொடங்கி
கிழக்குநோக்கி, மகாராஷ்டிரா,
 மத்தியப்பிரதேசம் ஆகிய
மாநிலங்களூடாகச்சென்று
 சட்டிஸ்கரில் முடிவடைகிறது.

*நூறு மலைகள் என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான சாத்பூரா என்ற சொல்லில் இருந்து சாத்பூரா மலைத்தொடர் என்ற பெயர் வருவிக்கப்பட்டுள்ளது.

*இக்காடுகள்  அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினங்களுக்கு உறைவிடமாக உள்ளது.

* சாத்பூரா மலைத்தொடரில் எண்ணற்ற புலிகள் காப்பகங்களும் இடம்பெற்றுள்ளன.

பாரம்பரிய விளையாட்டு - 8

இன்றைய செய்திகள்

21.02.20

◆தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

◆காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

◆சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி உட்பட 11 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

◆புதுச்சேரியில் 3 நாள் சர்வதேச ஆவண, குறும்படத் திருவிழா மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்குகிறது. ஆஸ்கர் விருது வென்ற 'அமெரிக்கன் ஃபேக்டரி' ஆவணப் படம் தொடக்க நாளில் திரையிடப்படுகிறது.


புது தில்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை நடைபெற்ற கிரேக்கோ ரோமன் 67 கிலோ எடைப்பிரிவில் சிரியாவின் அப்துல் கரீம் முகமதை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரா் அஷூ.

◆உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தின் படத்தை வெளியிட்டது பிசிசிஐ. இது இந்தியாவில் உள்ள ஆமதாபாதில் உள்ளது என்பது சிறப்புச் செய்தியாகும்.

Today's Headlines

🌸The District Court and District Revenue Officers have been instructed to remove the encroachments on water bodies and state-owned lands throughout Tamil Nadu.

 🌸Legislative Bill had been passed to Transform the Cauvery Delta into a Protected Area of ​​Agriculture in Tamilnadu state legislative assembly

 🌸In the list of 100 best universities 11 Indian Institutes are there including the Chennai IIT

 🌸Puducherry 3 day International Documentary Short Film Festival starts tomorrow at Central University  .The Oscar-winning documentary film "American Factory" premieres on opening day.

 🌸Indian Warrior Ashu won the bronze medal after beating Syria's Abdul Karim Mohammed in the Greco-Roman 67kg category on Wednesday as part of the Asian Wrestling Championships in New Delhi.

 🌸BCCI unveils picture of world's largest Motera cricket ground . It's special  that it is located in Ahmedabad, India.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One