அதில், வெளியிடப்பட்ட கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் :
தரமான கல்வியை மேம்படுத்த தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு
உயர் கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு.
அரசு உயர் மேல்நிலை பள்ளிகளுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களுக்காக ரூ.520.13 கோடி ஒதுக்கீடு.
மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்க ரூ.1018.4 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வி ஊக்கத் தொகை திட்டத்திற்கு ரூ.1949.58 கோடி ஒதுக்கீடு
ஏழை மாணவர்கள் உயர்கல்வியை பெறும் வகையில் முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக் கட்டணச் சலுகைகள் வழங்க 506 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
நபார்டு வங்கியின் உதவியுடன், ரூ.106.29 கோடி செலவில் 23 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
No comments:
Post a Comment