Search

DSE - கணினி பயிற்றுநர் பதவி உயர்வு - தகுதிவாய்ந்தோர் பெயர்பட்டியல் கோரி திருத்தப்பட்ட சுற்றறிக்கை!

Wednesday, 22 January 2020



பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கனவே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 2689 கணினி பயிற்றுநர்கள் பணியிடங்களில் காலியாக உள்ள 814 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்களாக நியமிக்கப்பட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது .

மேலும் , கணினி பயிற்றுநராக பணிபுரிபவர்களை பதவி உயர்வு செய்வதற்கு ஏதுவாக பார்வை3 - ல் குறித்துள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களின் செயல்முறைகளின்படி தகுதிவாய்ந்தோர் பெயர்பட்டியல் கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது . தற்போது பார்வை 3ல் குறித்துள்ள சுற்றறிக்கை இதன்மூலம் திரும்ப பெறப்பட்டு உத்தேச பெயர்பட்டியல் தயாரித்திடும் பொருட்டு திருந்திய அறிவுரைகள் வழங்கப்படுகிறது . பார்வை 1 - ல் குறித்துள்ள அரசாணையில் கணினி பயிற்றுநர் நிலை - 1 ( Post Graduate Cadre ) பணியிடங்க ளை ( with the minimum educational qualifications based on NCTE norm ) 8 ஆண்டுகள் பணி முடித்த கணினி பயிற்றுநர்களைக் கொண்டு பதவி உயர்வு மூலம் பூர்த்தி செய்திட பார்வை 1ல் காண் அரசாணையில் பத்தி 1ல் தெரிவிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் .

கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்களுக்கு ரூ . 9300 - 34800 + 4800 த . ஊ ( Pre - Revised Scale ) ( Level 18 , Rs . 36900 - 1 , 16 , 600 / - ) ( Revised Scale ) என்ற ஊதிய ஏற்ற முறையில் ஊதியம் பெற ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன . அவ்வாணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியின் அடிப்படையில் கீழ்க்காணும் கல்வித் தகுதிகள் ( கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக பதவி உயர்வு அளித்திட ) பெற்றிருக்க வேண்டும்
 

Most Reading

Tags

Sidebar One