Search

புதுவையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை - கல்வி அமைச்சர்

Tuesday, 21 January 2020

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் படி 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததது. அதற்கு ஏற்ப தமிழகத்திலும் முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், புதுச்சேரியில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்று அம்மாநில கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், பழைய முறையிலேயே மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் கூறினார். மாணவர்கள் தேர்வு எழுதும் பள்ளிகளில் அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட மாட்டார்கள் என்றும் வேறு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அந்தப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் கமலக்கண்ணன் கூறினார்.
 

Most Reading

Tags

Sidebar One