Search

தமிழில் வருமானவரி படிவம் 2020 மற்றும் விளக்கங்கள்!

Sunday, 19 January 2020


Income Tax 2019 - 2020 Form And instructions ( Tamil )

# வருமானவரி படிவம்
# படிவம் 12BB
# வருமானவரி விளக்கங்கள்

Income Tax 2019 - 2020 Form And instructions - Download here... ( pdf )

வீட்டு வாடகைப்படி ( HRA ) சில விளக்கங்கள் :

( i ) வீட்டு வாடகைப்படி வரிவிலக்கு பெற வேண்டுமானால் நீங்கள் வீட்டு வாடகை செலுத்தியிருக்க வேண்டும் .
( ii ) வீட்டு வாடகைப்படி முழுவதுமாக வரிவிலக்கு பெற வேண்டுமானால் உங்கள் வருடாந்திர வாடகைப்படியுடன் 10 % அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை கூட்டிக் கொள்ளவும் . நீங்கள் செலுத்தும் வருட வீட்டு வாடகை இத்தொகைக்கு மேல் இருந்தால் வீட்டு வாடகைப்படி முழுவதும் வரிவிலக்காக பெற முடியும் .
( iii) பெற்றோருக்கு வாடகை கொடுக்கும் பட்சத்தில் , வாடகைப்படியினை வரிவிலக்காக பெறலாம் .
( iv ) கணவன் - மனைவிக்கு இடையே வாடகை செலுத்தியிருந்தாலும் முறையான வாடகை ரசீது இருந்தால் விலக்கு பெறலாம் .
( v ) வீட்டு வாடகைப்படி மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி இரண்டினையும் கீழ்க்கண்ட சமயங்களில் வரிச்சலுகையாக பெற முடியும் .

1 . பணியாற்றும் இடமும் , வீட்டு கடனுக்கான வீடும் வெவ்வேறு நகரங்களில் அமைந்திருந்தால்
2 . இரண்டும் ஒரே நகரமாக இருந்தாலும் , வீட்டு கடனுக்கான வீடும் , பணியாற்றும் இடமும் கணிசமான தொலைவிலிருந்து . நீங்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தால் ,
3 . வீட்டு கடனுக்கான வீட்டில் உங்கள் பெற்றோர் குடியிருந்து , நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் மேற்குரியவை தங்களுக்கு பொருந்தியிருந்தால் வீட்டு வாடகைப்படியையும் வீட்டு கடனுக்கான வட்டியையும் வரிவிலக்காக பெறப்படும் .

( vi ) உங்கள் சம்பள பட்டியலில் வீட்டு வாடகைப்படி ( HRA ) பெறவில்லை எனில் வீட்டு வாடகைப்படி வரிவிலக்குக்கு பதிலாக , பிரிவு 80GG படி வீட்டு வாடகை செலுத்தியிருந்தால் அதிகபட்சம் ரூ . 60 , 000 / - - வரிவிலக்காக பெற முடியும் .
( vii ) நீங்கள் வீட்டு வாடகை ரூ . 3000 ! - த்திற்கு மேல் செலுத்தியிருந்தால் வாடகை ரசீதை சமர்பிக்க வேண்டும் .
( viii ) நீங்கள் வருடத்திற்கு ரூ . 1 லட்சத்திற்கு மேல் வாடகை செலுத்தியிருந்தால் ( மாதத்திற்கு ரூ . 8 , 333pm ) வீட்டு உரிமையாளரின் நிரந்தர கணக்கு எண்ணை சமர்பிக்க வேண்டும் . நிரந்தர கணக்கு எண் இல்லையெனில் உரிமையாளர் அதனைப்பற்றிய சான்றிதழ் கடிதம் தர வேண்டும் .

வீட்டுக்கடன் - வட்டி மற்றும் அசல் :

1 ) வீடு கட்டுவதற்காக ( அ ) வாங்குவதற்காக பெறப்பட்ட கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியினை ரூ . 2 லட்சம் வரையிலும் ( பிரிவு 24B ) அசலினை ரூ . 1 , 50 , 000 / - - வரையிலும் ( பிரிவு 80C ) வருமானத்திலிருந்து நீக்கி , வரிச்சலுகை பெற முடியும் . இக்கடனானது 1 . 4 . 1999க்கு பிறகு பெற்றிருத்தல் வேண்டும் . அதற்கு முன் பெற்றிருந்தால் ரூ . 30 , 000 / - - மட்டுமே வரிச்சலுகையாக பெற முடியும் . மற்றும் வீட்டு கடன் வாங்கிய தேதியிலிருந்து மூன்று வருடத்திற்குள் வீடு கட்டியோ , வாங்கியோ இருத்தல் வேண்டும் .

2 ) வீடு புதுப்பித்தல் ( அ ) மறு சீரமைப்புக்காக பெறப்பட்ட கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியினை ரூ . 30 , 000 / - வரை ( பிரிவு 24B ) வருமானத்திலிருந்து நீக்கி வரிச்சலுகை பெற முடியும் . செலுத்திய அசலுக்கு வரிச்சலுகை பெற முடியாது .

3 ) . வீடு கட்டுவதற்கோ ( அ ) வாங்குவதற்கோ வங்கியில் மட்டுமல்லாமல் , நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக கடன் பெற்று அதற்கு வட்டி செலுத்தியிருந்தால் அவர்களிடம் வட்டி செலுத்தியதற்கான சான்று பெற்று அவ்வட்டியினை வருமானத்திலிருந்து நீக்கி வரிச்சலுகை பெற முடியும் . ஆனால் செலுத்திய அசலுக்கு வரிச்சலுகை பெறவேண்டுமானால் வீட்டுக் கடனை வங்கி மற்றும் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பெற்றிருத்தல் வேண்டும் ,

4 ) வீட்டுக் கடனை அடைப்பதற்கு இரண்டாவதாக வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அதற்கான கடனுக்கும் வட்டி ( அ ) அசல் வரிச்சலுகை உண்டு .

5 ) வீடு கட்டி முடிப்பதற்குள் வீட்டுக் கடனுக்கான வட்டியை , செலுத்தியிருந்தால் 5 பாகங்களாக பிரித்து கட்டி முடித்த வருடத்திலிருந்து அவ்வருட வட்டியினையும் சேர்த்து ஒவ்வொரு பகுதியாக 5 வருடங்களுக்கு வருமானத்திலிருந்து நீக்கி வரிசலுகையை பெற முடியும் .

6 ) . வீடு மற்றும் வீட்டுக் கடன் இருவர் ( அ ) பலர் இணை உரிமையாளராக இருந்து அதனை அனைவரும் திருப்பி செலுத்தியிருந்தால் தங்கள் பொறுப்பின் விகிதாசாரத்திற்கு ஏற்ப அனைவரும் வருமானத்திலிருந்து நீக்கி வரிச்சலுகை பெற முடியும் . ஒவ்வொருவருக்கும் வட்டியில் உச்சவரம்பான ரூ . 2 லட்சத்தையும் அசலில் ரூ . 1 , 50 , 000 / - லட்சமும் வரிச் சலுகையாக பெற முடியும் .

7 ) . வீடு மற்றும் வீட்டுக் கடன் இருவர் ( அ ) பலர் இணை உரிமையாளர்களாக இருந்து ஒருவர் மட்டுமே வீட்டுக் கடனை செலுத்தியிருந்தால் , அவர் மற்ற இணை உரிமையாளர்களிடம் , அவர் மட்டும் வீட்டுக்கடனை செலுத்தியதாக ஒரு எளிய ஒப்பந்தத்தை எழுதிக்கொண்டு , மொத்த வட்டி மற்றும் அசலையும் வரிசலுகையாக பெற முடியும் .

8 ) . ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருக்குமாயின் இரண்டு வீடுகளை வீட்டினை அவர் குடியிருக்கும் வீடாகவும் ; மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டதாகவும் வருமான சட்டப்படி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் . குடியிருக்கும் வீட்டிற்கும் மற்ற வீடுகளுக்கும் தனிதனியே வட்டியை வரி சலுகையாக பெற முடியும் . வாடகையை வீட்டு வருமானமாக காட்ட வேண்டும் .

9 ) . பிரிவு 71பி யின் படி குடியிருக்கும் வீடு + வாடகைக்கு விட்டது சேர்ந்து இழப்பு ரு . 2 , 00 , 000 / - வரை வரி சலுகை பெற முடியும் . மீத இழப்பினை அடுத்த 8 வருடத்திற்கு முன்னெடுத்து செல்லாம் .
 

Most Reading

Tags

Sidebar One