Search

நூலகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு செப்டம்பரில் நேர்காணல் தேர்வு

Thursday, 22 August 2019

நூலகர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பரில் நேர்காணல் நடத்தப்படும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
இதுகுறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பல்வேறு துறைகள், பணிகளில் அடங்கிய நூலகர் பதவிக்கு 64 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி நேர்காணல் தேர்வு நடத்தப்படும்.

சுரங்கத் துறைக்கான நிலவியலாளர் பணியிடத்துக்கு 5 பேரும், அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் பணியிடத்துக்கு 5 பேரும், மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாளர் பதவிக்கு 108 பேரும், கால்நடை பராமரிப்புக்கான ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு 52 பேரும் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது சான்றிதழ்களை வரும் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள்ளாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது


Read More »

தமிழகம் முழுவதும் 1,475 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் காலி: இந்த ஆண்டே நிரப்ப தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 1,475 வருவாய் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலமாகவும், பதவி உயர்வு மூலமும் நடப்பாண்டே நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உத்தரவின் பேரின் வருவாய் நிர்வாக இணை கமிஷனர் லட்சுமி, தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது: தமிழகம் முழுவதும், 1,475 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நடப்பாண்டில் (2019-2020) நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, 91 வருவாய் உதவியாளர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு மூலம் நிரப்ப, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிஎன்பிஎஸ்சி விரைவில் முறையான அறிவிப்பை வெளியிடும்.

மீதமுள்ள 1,384 வருவாய் உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, சென்னையில் 140 இடங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 174 இடங்களம், திருவள்ளூர் மாவட்டத்தில் 80 இடங்களும், கோவையில் 55 இடங்களும் காலியாக உள்ளது. இவைகளை இந்த ஆண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


Read More »

கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு!



சிபிஎஸ்சி நடத்தும் டிசம்பர் மாதத்திற்கானசிடெட் (CTET) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முக்கிய தேதிகள்: 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 19.08.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.09.2019 
தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 23.09.2019, மதியம் 3.30 மணிக்குள்



தேர்வு நடைபெறும் தேதி: 
முதல் தாளுக்கான தேர்வு - 08.12.2019, காலை 09.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
இரண்டாம் தாளுக்கான தேர்வு - 08.12.2019, மதியம் 02.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை

விண்ணப்பக் கட்டணம்: 
1. முதல் தாள் அல்லது இரண்டாம் தாள்: (ஏதேனும் ஒன்றிற்கு மட்டும்) 
i) பொது / ஓபிசி (NCL) பிரிவினர் - ரூ.700 
ii) எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.350

2. முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்: (இரண்டிற்கும்) 
i) பொது / ஓபிசி (NCL) பிரிவினர் - ரூ.1200 
ii) எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.600



கல்வித்தகுதி: 
1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், சீனியர் செகன்டரி (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எலிமென்டரி எஜுகேசன் (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எஜுகேசன் (அல்லது) 4-வருட பேச்சுலர் ஆப் எலிமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய பேச்சுலர் ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், பட்டப்படிப்புடன் கூடிய 2-வருட டிப்ளமோ இன் எலிமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய 1-வருட பேச்சுலர் இன் எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எலிமென்டரி எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரியில் கடைசி வருடம் பயின்றுக் கொண்டிருப்பவர்களும் இந்தத் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://ctet.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.





தேர்வு முறை:
அனைத்து வினாக்களும் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். ஒவ்வொரு வினாக்களுக்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது.

இரண்டு பேப்பர்களுக்கு சிடெட் தேர்வு நடைபெறும். அதில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மட்டும் எழுதினால் போதுமானது. 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-2 மட்டும் எழுதினால் போதுமானது. இரண்டிலும் பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டையும் எழுத வேண்டும்.



பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டிலுமே 150 கேள்விகள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

20 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும்.

மேலும் இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://ctet.nic.in/CMS/Handler/FileHandler.ashx?i=File&ii=162&iii=Y - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்


Read More »

மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி - ஆக.31

மத்திய அமைச்சகம் மற்றும் அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 1,351 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் சுமார் 1,351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெறும்.



இதில் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்தது. இந்தப் பணியிடங்கள் குறித்த விரிவான விளம்பரம், தேவையான தகுதிகள், விண்ணப்ப முறைகள் போன்ற தகவல்களை ssc.nic.in , sscsr.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு வரும் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார்


Read More »

2393 காலிப்பணியிடங்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை

தெற்கு ரயில்வேயின் சென்னையில் ஒப்பந்தகால அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

Trackman, Helper (Track Machine), Helper (Tele), Helper (Signal), Pointsman 'B' (SCP), Helper (C&W), Helper/Diesel Mechanical, Helper/Diesel Electrical, Helper/TRD - Ex-Servicemen in Level 1 பிரிவில் 2393 பணியிடங்கள் உள்ளன.

தகுதி:

ராணுவத்தில் 15 ஆண்டு பணியாற்றி ராணுவ வகுப்பு 1 சான்றிதழ் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்று ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு:



50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://rrcmas.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/RRC_CHENNAI_EXMAN_CONTRACT_NOTIFICATION.pdfஎன்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2019


Read More »

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை: 26 முதல் நேர்முகத் தேர்வு

ஏர் இந்தியா பொறியியல் சேவை லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 393 டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Aircraft Technician (Maint/Aircraft Overhaul, Engine) - 138
பணி: Aircraft Technician Avionics, Electrical, Instrument, Radio) - 102

தகுதி: Aircraft maintenance Engineering பிரிவில் டிப்ளமோ அல்லது மெக்கானிக்கல், ஏரோநட்டிக்கல் பிரிவில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூகேஷன், ரேடியோ, இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்து ஒன்று மற்றும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: Skilled Trades Men - Fitter, Sheet Metal Trade - 47
பணி: Skilled Trades Men Painter Trade - 28
பணி: Skilled Trades Men Upholstery, Sewing Technology Trade - 31
பணி: Skilled Trades Men, X-Ray, NDT Trade - 09

தகுதி: இயற்பியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Skilled Trades Men, Electroplating Trade - 02

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Skilled Trades Men, Welder Trade - 04
பணி: Skilled Trades Men, Machincal Trade - 06
பணி: Skilled Trades Men, Fiberglass, Carpenter - 07
பணி: Draughtsman - 05
பணி: Skilled Trades - Plant Electrical - 02
பணி: Skilled Trades - Plant Mechanical - 12



தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி பொது பிரிவினர் 35 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 38 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தொழில்திறன், டிரேடு தேர்வு மற்றும் டெக்னிக்கல் அஸஸ்மெண்ட் தேர்வு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Engineering Services Limited, Personnel Department, Avionics Complex, First Floor, IGI Airport(Near New Custom House), New Delhi - 110 037



விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை Air India Engineering Services Limites என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aisel.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் சுயசான்று செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் தேதி: 26.08.2019 முதல் 24.09.2019 வரை நடைபெறுகிறது.

மேலும் விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/808_1_Revised-Notification-for-Aircraft-Tech-and-Skilled-tradesmen.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


Read More »

TNPSC GROUP 4 MODEL QUESTION PAPER AND ANS KEY COLLECTION - THENI IAS ACADEMY


TNPSC GROUP 4 MODEL QUESTION PAPER AND ANS KEY COLLECTION - THENI IAS ACADEMY






model question paper-1 click here to download

model question paper-2 click here to download

model question paper-3 click here to download
tnpsc model question paper and ans -1 click here to download



tnpsc model question paper and ans -2 click here to download

tnpsc model question paper and ans -3 click here to download

tnpsc model question paper and ans -4 click here to download

tnpsc model question paper and ans -6 click here to download



tnpsc model question paper and ans -7 click here to download

tnpsc model question paper and ans -9 click here to download

tnpsc model question paper and ans -10 click here to download

tnpsc model question paper and ans -11 click here to download

tnpsc model question paper and ans -12 click here to download



tnpsc model question paper and ans -13 click here to download

tnpsc model question paper and ans -14 click here to download

tnpsc model question paper and ans -15 click here to download

tnpsc model question paper and ans -16 click here to download

tnpsc model question paper and ans -17 click here to download



tnpsc model question paper and ans -18 click here to download

tnpsc model question paper and ans -19 click here to download

tnpsc model question paper and ans -20 click here to download



tnpsc model question paper and ans -21 click here to download

tnpsc model question paper and ans -22 click here to download

tnpsc model question paper and ans -23 click here to download

PREPARED BY



இரா.சக்திவேல்
பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி
மணக்கால் அய்யம்பேட்டை
திருவாரூர் மாவட்டம் 610104
பேசி : 8056482040
மின்னஞ்சல்: sakthi2101974@gmail.com


Read More »

Group IV தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கையேடு.

Group IV தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கையேடு. CLICK DOWNLOAD


Read More »
 

Most Reading

Tags

Sidebar One