மத்திய அரசில் பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்டில் Engineers India Limited (EIL) காலியாக உள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி (Management Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
மேனேஜ்மென்ட் டிரெய்னி (Management Trainee) பிரிவில் 79 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
B.E மற்றும் B.Tech துறையில் படித்து முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
Graduate Aptitude Test மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.engineersindia.com என்ற இணையதளத்தின் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://recruitment.eil.co.in/hrdnew/mt/GATE_Detailed_Advertisement_Final_1920_06.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20-06-2019
Search
பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்டில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வேலை
Tuesday, 11 June 2019
டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை விமான தளத்தில் பணி !
இந்திய விமான ஆணைய நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனமான ஏஏஐ கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்-இல் செக்யூரிட்டி பர்சனல், எக்ஸ்-ரே ஸ்கீரினர்ஸ் போன்ற பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அல்லது லட்சத்தீவு போன்ற இடங்களை சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
செக்யூரிட்டி பர்சனல்
எக்ஸ்-ரே ஸ்கீரினர்ஸ்
மொத்த காலியிடங்கள் = 176
முக்கிய தேதிகள்:
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 20.06.2019
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.30,000 வரை மாத தொடக்க ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: (01.06.2019 அன்றுக்குள்)
அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வுக்கட்டணம்:
1. பொது / ஓபிசி பிரிவினர்: ரூ.500
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
தேர்வுக்கட்டணத்தை கீழ்க்கண்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
'AAI Cargo Logistics & Allied Services Company Ltd, payable at New Delhi'.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 3 வருட இளங்கலை பட்டம்பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். அத்துடன் BCAS அடிப்படை AVSEC சான்றிதழ்பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் பேசத் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
BCAS அடிப்படை AVSEC சான்றிதழ் பெறாதேரும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://aaiclas-ecom.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief Security Officer, AAI Cargo Logistics & Allied Services Company Ltd, AAICLAS Complex, Delhi Flying Club Road, Safdarjung Airport, New Delhi - 110 003.
தேர்வு முறை:
1. உடற்தகுதி தேர்வு (PET)
2. எழுத்துத் தேர்வு
3. நேர்முகத் தேர்வு
மேலும், இது குறித்த முழுத்தகவல்களுக்கு,https://aaiclas-ecom.org/Live/images/ADVT_CHENNAI_AMENDED.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:
உதவி பொது மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேவைப்படுகின்றன.
கல்வித் தகுதி:
ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கு 53 வயதிற்குள் இருக்க வேண்டும். பொது மேலாளர் பணியிடங்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.tmbnet.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Limited. Head Office, #57, V.E.Road, Thoothukudi - 628 002.
மேலும் முழுமையான விவரங்களை அறிய www.tmbnet.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி தேதி: 17.06.2019
மத்திய அரசின் எல்லை சாலை கழகத்தில் 778 காலி பணியிடங்கள் அறிவிப்பு..
மத்திய அரசு நிறுவனமான பிஆர்ஓ என அழைக்கப்படும் எல்லை சாலைகள் கழகத்தில் காலியாக உள்ள 778 ஓட்டுநர், எலக்டிரீசியன், மெக்கானிக், மல்டி ஸ்கில் ஒர்க்கர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 778
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: DVRMT - 388
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சம்பளம்: மாதம் ரூ.19,900 - 44,400
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Electrician -101
பணி: Veh Mechanic - 92
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக், எலக்ட்ரீசியன் பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.சம்பளம்: மாதம் ரூ.19,900 - 44,400
வயதுவமர்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
பணி: Multi Skilled Worker (Cook) - 197
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 39,900
கட்டணம்: பொது பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பிசி பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை Commandant, GREF Centre, பொது கணக்கு எண் 1182905409-ல் State Bank of India, Khadki Branch Pune-ல் கணக்கில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.bro.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant, GREF CENTRE, Dighi Camp, Pune - 411 015