Search

ரூ.65,500 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை..!

Thursday, 4 April 2019


நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட 57 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள் முதல் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் வரை விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
பணி மற்றும் காலியிடங்கள் விபரம்: 
பணி: கணினி இயக்குபவர் - 04 
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500

பணி: இரவு நேரக் காப்பாளர் - 10 
பணி: ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் - 07 
பணி: ஓட்டுநர் - 01 
பணி: சமையலர் - 06 
பணி: துப்புரவுப் பணியாளர் - 04 
பணி: சுகாதார பணியாளர் - 03 
பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 10 
சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 62,00
தகுதி: கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை:https://districts.ecourts.gov.in/india/tn/namakkal என்னும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாமக்கல் - 637003 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.04.2019 
மேலும் முழுமையைான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment_Civil%20-%20Notification%20-%20Tamil_01-04-2019 pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
Read More »

மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், சிறப்பு அதிகாரி உள்ளிட்ட 496 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 496 

நிர்வாகம்: மத்திய ஆயுத காவல் படை (சிஆர்பிஎஃப்) 
பணி: மருத்துவ அதிகாரி - 317 
பணி: ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் அதிகாரி - 175 
பணி: சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் அதிகாரி - 04 
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், எம்எஸ், எம்டி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
பணி அனுபவம்: 2 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை:www.crpf.gov.in அல்லது www.recrultment.ltbpolice.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2019 
Read More »

இது புதிய அறிவிப்பு... எஸ்பிஐ வங்கியில் 2000 அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

வங்கி சேவைகளில் முதன்மை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 2000 புரோபேஷனரி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்தும் மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பணியே தனது இலக்காக கொண்டுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறவும்.

பணியிடம்: நாடு முழுவதும்

பணி: Probationary Officer


காலியிடங்கள்: 2000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ. 23700-980/7-30560-1145/2-32850-1310/7-42020

வயது வரம்பு: 01.04.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers  என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பத்தாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் தகவல் அளிப்பு கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One